கூகுள் மொழிபெயர்ப்பில் ஓடியா உட்பட 5 புதிய மொழிகள் சேர்ப்பு!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 28 பிப்ரவரி 2020 10:51 IST
ஹைலைட்ஸ்
  • ஐந்து புதிய மொழிகளுக்கான ஆதரவைச் சேர்ப்பதாக கூகுள் அறிவித்துள்ளது
  • கின்யார்வாண்டா, ஒடியா, டாடர், துர்க்மென் மற்றும் உய்குர் மொழிகள்
  • புதிய மொழிகள் உரை (text) மற்றும் வலைத்தள மொழிபெயர்ப்புகளை ஆதரிக்கின்றன

கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையில் ஐந்து புதிய மொழிகளுக்கான ஆதரவைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது

அமெரிக்காவை தளமாகக் கொண்ட search engine நிறுவனமான கூகுள், தனது மொழிபெயர்ப்பு சேவையில் ஐந்து புதிய மொழிகளுக்கான ஆதரவைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.

இப்போது கின்யார்வாண்டா (Kinyarwanda), ஒடியா (Odia), டாடர் (Tatar), துர்க்மென் (Turkmen) மற்றும் உய்குர் (Uyghur) ஆகிய மொழிகளில் இருந்து ஒரு விஷயத்தை இறுதியாக மொழிபெயர்க்கலாம்.

"நிறைய web content இல்லாத மொழிகள் பாரம்பரியமாக மொழிபெயர்ப்பது சவாலானது, ஆனால் எங்கள் இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மூலம், கூகுள் மொழிபெயர்ப்பு சமூகத்தின் செயலில் ஈடுபாட்டுடன், நாங்கள் ஐந்து மொழிகளுக்கான ஆதரவைச் சேர்த்துள்ளோம்: கின்யார்வாண்டா (Kinyarwanda), ஓடியா (ஒரியா), டாடர் (Tatar), துர்க்மென் (Turkmen) மற்றும் உய்குர் (Uyghur), "ஐசக் காஸ்வெல் மென்பொருள் பொறியாளர், Google Translate புதன்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது.

இந்த புதிய மொழிகள் உரை (text) மற்றும் வலைத்தள மொழிபெயர்ப்புகளை ஆதரிக்கின்றன என்று Google கூறுகிறது, கின்யார்வாண்டா (Kinyarwanda), டாடர் (Tatar) மற்றும் உய்குர் (Uyghur) குறிப்பாக மெய்நிகர் விசைப்பலகை உள்ளீட்டை ஆதரிக்கிறது.

"உலகளவில், 75 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசும் இந்த மொழிகள், நான்கு ஆண்டுகளில் கூகுள் மொழிபெயர்ப்பில் நாங்கள் சேர்த்த முதல் மொழிகள், மேலும் கூகுள் மொழிபெயர்ப்பின் திறன்களை 108 மொழிகளாக விரிவுபடுத்துகின்றன" என்று காஸ்வெல் (Caswell) மேலும் கூறினார்.

கின்யார்வாண்டா (Kinyarwanda) ருவாண்டாவின் (Rwanda) உத்தியோகபூர்வ மொழியாகும், ஒடியா என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் பேசப்படும் மொழியாகும்.

டாடர் (Tatar) முதன்மையாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் உஸ்பெகிஸ்தானில் (Uzbekistan) பேசப்படுகிறது, துர்க்மென் (Turkmen) துர்க்மெனிஸ்தானின் (Turkmenistan) உத்தியோகபூர்வ மொழியாகவும், உய்குர் (Uyghur) சுமார் 10.4 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Google Translate, Odia
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  2. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
  3. iQOO Pad 5c அறிமுகம்: 10,000mAh பேட்டரி, 12.1-இன்ச் 2.8K டிஸ்ப்ளே - விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  4. Uber இந்தியாவில் 'Record My Ride', 'Ambulance Assistance' எனப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
  5. ஜிமெயில் மற்றும் கூகுள் கீப் -இல் புதிய உரையாடல் குரல் அம்சங்களை கூகுள் சோதிக்கத் தொடங்குகிறது
  6. ஒப்போ என்கோ ஏர் 5 ப்ரோ (Oppo Enco Air 5 Pro) விமர்சனம்: சமரசமற்ற தரம், முழுமையான மதிப்பு
  7. ஒன்பிளஸ் என்6 இந்தியாவில் அறிமுகம்: 8,000mAh பேட்டரி, டைமென்சிட்டி 6360 சிப்செட் மற்றும் விலையில் வெளியீடு!
  8. சாம்சங் கேலக்ஸி A27 5G இந்தியாவில் வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி சலுகை விவரங்கள்
  9. வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: இது என்ன, எப்படிச் செயல்படுகிறது, ஏன் முக்கியம்?
  10. அமேசான் பிரைம் டே விற்பனை: ஒன்பிளஸ் 15, பேட் 4, நோர்ட் பட்ஸ் 4 உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.