கூகுள் ப்ளேயில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை திருடும் 17 ட்ரோஜன் செயலிகள்!

மொத்தத்தில், ட்ரோஜன் மறைக்கப்பட்ட விளம்பரங்களை கொண்டுள்ள செயலிகள் 1.5 கோடிக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

கூகுள் ப்ளேயில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை திருடும் 17 ட்ரோஜன் செயலிகள்!

கூகுள் ப்ளேயில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை திருடும் 17 ட்ரோஜன் செயலிகள்!

ஹைலைட்ஸ்
  • Google Play is found to have Trojan apps from multiple developers
  • The Trojan campaign seems to have initially targeted users in India
  • Google Play has been used on bad actors in the past as well
விளம்பரம்

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான அவாஸ்ட், கூகிள் ப்ளேவில் ட்ரோஜன் குடும்பத்தின் ஒரு பகுதியான ஹிடன்ஆட்ஸ் வகையில், குறைந்தது 17 செயலிகள் இருப்பதாகக் கூறியுள்ளது. இந்த செயலிகள் ஆரம்பத்தில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பயனர்களை குறிவைத்து மிகப்பெரிய மறைக்கப்பட்ட விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றன. இந்த செயிலகள் கேம்களாக மறைக்கப்படுகின்றன, ஆனால் அவை ஊடுருவும் விளம்பரங்களைக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடலாம் என்று அவாஸ்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ட்ரோஜன் பயன்பாடுகள் பாதிக்கப்பட்ட சாதனங்களிலிருந்து தங்கள் ஐகான்களை மறைக்கும் திறனைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர் மற்றும் ஸ்கிப் செய்ய முடியாத குறிப்பிட்ட நேர விளம்பரங்களைக் காட்டுவதையும் கவனித்துள்ளனர். 

அவாஸ்ட் ஆராய்ச்சியாளர்களின் குழு ஆரம்பத்தில் ட்ரோஜன் குடும்பமான HiddenAds-ஐ சேர்ந்த மொத்தம் 47 செயலிகளை கண்டுபிடித்தது. எனினும், வைரஸ் தடுப்பு நிறுவனத்திடமிருந்து அறிக்கையைப் பெற்ற கூகிள் 30 செயலிகளை நிக்கியது.

“இந்த செயலிகளை பயனர் பயன்பாட்டிற்காக பதிவிறக்கியதும், அதற்குள் ஒரு டைமர் ஓடதொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விளையாட்டை விளையாட பயனர் அனுமதிக்கப்படுகிறார், அதன் பிறகு டைமர் பயன்பாட்டின் மறை ஐகான் அம்சத்தைத் தூண்டுகிறது ”என்று அவாஸ்ட் அச்சுறுத்தல் செயல்பாட்டு ஆய்வாளர் ஜாகுப் வவ்ரா ஒரு வலைப்பதிவில் விளக்கியுள்ளார். "ஐகான் மறைக்கப்பட்டதும், பயனரிடமிருந்து கூடுதல் நடவடிக்கைகள் தேவையில்லாமல் சாதனம் முழுவதும் விளம்பரங்களைக் காண்பிக்க செயலி தொடங்குகிறது."

அவாஸ்ட் குழு கண்டுபிடித்த சில ட்ரோஜன் பயன்பாடுகள் பயனர்களுக்கு ஊடுருவும் விளம்பரங்களைக் காண்பிக்க பிரவுசரை திறப்பதாகக் கூறப்படுகிறது. பயன்பாடுகள் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு அவர்களின் ஐகானை மறைப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சாதனங்களில் பார்க்கும் விளம்பரங்களின் தோற்றத்தை புரிந்து கொள்ள முடியாது. ட்ரோஜன் பயன்பாடுகளை ஆப் மேனேஜர் மூலம் இன்னும் நிறுவல் நீக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு பயன்பாடுகளும் பொதுவான மின்னஞ்சல் முகவரியுடன் கூகிள் பிளேயில் பட்டியலிடப்பட்ட தனி டெவலப்பரைக் கொண்டிருப்பதை அவாஸ்ட் குழு கண்டறிந்தது. "இதேபோல், கண்டுபிடிக்கப்பட்ட பயன்பாடுகளில் சேவை விதிமுறைகள் ஒரே மாதிரியானவை, இது ஒரு நடிகரின் ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை சுட்டிக்காட்டுகிறது" என்று வவ்ரா மேலும் கூறினார்.

மொத்தத்தில், ட்ரோஜன் மறைக்கப்பட்ட விளம்பரங்களை கொண்டுள்ள செயலிகள் 1.5 கோடிக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த செயலிகள் மூலம் மறைக்கப்பட்ட விளம்பரங்கள் பிரச்சாரம் பிரேசில், இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனினும், இது மற்ற பகுதிகளிலும் பரவியது.

இதுதொடர்பாக கூகிளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்ட போதிலும், இந்த செய்தியை வெளியிடும் நேரம் வரை எந்த பதிலும் வரவில்லை. 

இதுபோன்ற செயலிகளிலிருந்து விலகி இருக்கும் வழிகள்

செயிலிகளின் கோரிக்கைகளை அவற்றை சாதனங்களில் நிறுவும் முன்பு கவனமாகப் பார்க்குமாறு அவாஸ்ட் பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நிறுவப்பட்ட செயலிகளின் தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்வதும் முக்கியம். மேலும், பயனர்கள் அதிக எண்ணிக்கையிலான எதிர்மறை மதிப்புரைகளைப் பெற்ற பயன்பாட்டைப் பதிவிறக்குவதை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  2. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  3. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  4. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  5. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  6. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  7. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  8. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  9. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  10. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »