இந்த ஆண்டு நடந்த கூகுள் i/o நிகழ்ச்சியில், கூகுள் அசிஸ்டன்ட் மூலம், பயன்பாட்டாளர் தரும் உத்தரவுகளை செய்யும் புதிய அம்சம் கொண்டு வரப்படுவதாக அறிவித்திருந்தது. மேலும், பயன்பாட்டாளர்கள் செய்யச் சொல்லி அளிக்கும் உத்தரவுகளை, குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்று குறித்து வைத்துக் கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் கூறியிருந்தது.
அதை இப்போது கூகுள் ஹோம் ஆப் மூலம் செயல்படுத்தியுள்ளது. அதே நேரம் இந்த அம்சம் ஜி மெயில்லுக்கும் கொடுக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. டிராய்ட் என்ற இணையதளத்தின் செய்தியில், ரோல் அவுட் முறையில் குறிப்பிட்ட அளவு பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. உங்களுக்கு இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை, கூகுள் ஹோம் செயலியில், செட்டிங்க்ஸ் ---> ரொட்டீன்ஸ்--->’+’ பட்டனை அழுத்தி ஒரு ரொட்டீனை உருவாக்கி தெரிந்து கொள்ளலாம்.
இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் சில செயல்களை (ரொட்டீன்) செய்ய வைக்க முடியும். எடுத்துக் காட்டாக, பெட்ரூமில் இருக்கும் இன்டெர்னெட் மோடமை இரவு 11 மணிக்கு ஆஃப் செய்ய உத்தரவிடலாம். இன்னும் பலவற்றை இதில் நிகழ்த்த முடியும்.
இது வரை கூகுள் அசிஸ்டென்ட் மூலம், வேறு செயலிகளில் வாய்ஸ் மூலம் உத்தரவுகளை கொடுத்து வந்திருப்பீர்கள். இப்போது இது அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக கிடைக்கிறது. கூடிய விரைவில் ஜிமெயிலின் வெப் மற்றும் செயலியிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி செய்யும் பட்சத்தில், இனி இ-மெயிலையும் குறிப்பிட்ட நேரத்துக்கு அனுப்பும் வகையில் குறித்து( ஷெட்யூல்) வைக்க முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்