வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 18 ஜூலை 2019 11:50 IST
ஹைலைட்ஸ்
  • இந்த 'ஃபேஷ்ஆப்' என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி
  • வயதானால் நம் முகம் எப்படி இருக்கும் என இந்த செயலி காட்டும்
  • இந்த செயலியில் 'மேக் யூ ஸ்மைல்' வசதியும் இடம்பெற்றுள்ளது

இந்தியாவில் 'ஃபேஷ்ஆப்'பை பயன்படுத்துகிறீர்களா, இந்த பிரச்னை வரலாம்!

சமூக வலைதளங்களில் தாற்போதைய ட்ரென்டிங்கில் இருப்பது இந்த 'ஃபேஸ்ஆப்' தான். ஒரே நாளில் பயங்கர வைரலான இந்த செயலி, தற்போது அனைவரது ஸ்மார்ட்போனிலும் இடம் பிடித்துவிட்டது. நமது தற்போதைய புகைப்படத்தை இந்த செயலியில் பதிவேற்றினால், நமக்கு வயதானால் அந்த முகம் எப்படி இருக்கும் என இந்த செயலி மாற்றிக்காட்டும். இந்தியாவில் இந்த செயலி தற்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. அனைவரும், இதில் தங்கள் தற்போதைய புகைப்படங்களை பதிவேற்றி வயதானால் முகம் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய வண்ணம் உள்ளனர். 

இன்னிலையில் இந்த ஆப் தங்கள் ஸ்மார்ட்போனில் ப்ளாக் செய்யப்பட்டாதாக டிவிட்டரில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை கேட்ஜெட் 360-ம் உறுதி செய்துள்ளது. இந்திய பயன்பாட்டாளர்களை இந்த செயலி ப்ளாக் செய்திருந்தாலும்,  'ஃபேஷ்ஆப்' இன்னும் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெருகிறது. 

நீங்கள் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளராக இருந்தால், இந்தியாவில் இந்த  'ஃபேஸ்ஆப்' செயலியை பயன்படுத்திக்கொண்டிருந்தால், "Something went wrong, Please try again" என்ற ஒரு எச்சரிக்கை உங்களுக்கு தென்படும். அதே நேரம் iOS பயன்பாட்டாளர் என்றால் இந்த செயலி "ApiRequestError error 6 - Operation couldn't be completed" என்ற தகவலை உங்களுக்கு அளிக்கும். இந்த பிரச்னை முதலில் டிவிட்டரில் எழுப்பப்பட்டது. பின் கேட்ஜெட்ஸ் 360-யும் இதனை உறுதி செய்துள்ளது. 

இந்த 'ஃபேஸ்ஆப்' என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி. இதில், நமது தற்போதைய புகைப்படத்தை இந்த செயலியில் பதிவேற்றினால், நமக்கு வயதானால் அந்த முகம் எப்படி இருக்கும் என இந்த செயலி மாற்றிக்காட்டும். தற்போது இந்த செயலி இந்தியாவில் ட்ரென்டாகி வருகிறது. கடந்த சில நாட்களில், ஆப்பிள் ஸ்டோரில், இலவச ஆப்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே நேரம், கூகுள் ப்ளே ஸ்டோரில் டாப் மூன்று இடங்களில் நிற்கிறது. இந்த ஆப்பின்மூலம், வயதான தோற்றம் கொண்டதாக மாற்றப்பட்ட புகைப்படங்களை, மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த செயலியில் ஓல்ட்-ஏஜ் பில்டர் மற்றுமின்றி, 'மேக் யூ ஸ்மைல்' வசதியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான வசதிகளைக் கொண்ட 'ஃபேஸ்ஆப்'-ல் இம்மாதிரியான பிரச்னைகள் ஏற்படுவது இதுவே முதன்முறை. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: FaceApp, face app, India

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கேமரா கண்ணுக்கே தெரியாது! Galaxy S26-ல் வரப்போகும் மிரட்டலான One UI 8.5 அம்சம்! இனி முழு டிஸ்பிளேவும் உங்களுக்கே
  2. சிக்னல் கவலை இனி இல்லை! BSNL-ன் மாஸ் அப்டேட்! வீட்ல வைஃபை இருந்தா போதும், தாராளமா பேசலாம்
  3. தம்பி வருது.. வழி விடு! OnePlus Nord 6 லான்ச் நெருங்கிடுச்சு! 9000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு மிரட்டப்போகுது
  4. மெலிசான போன்.. ஆனா பவர் அசாத்தியம்! Moto X70 Air Pro-வில் 50MP பெரிஸ்கோப் கேமரா? TENAA லீக் கொடுத்த அதிரடி அப்டேட்
  5. வீடே தியேட்டராக போகுது! சாம்சங்கின் புது AI புரொஜெக்டர் - Freestyle+ வந்தாச்சு! CES 2026 அதிரடி
  6. பெர்பாமன்ஸ்ல மிரட்ட வருது Realme 16 Pro+! அன்டுடு ஸ்கோர் பாத்தா அசந்து போயிருவீங்க
  7. இனி WhatsApp Status-ல பட்டாசு வெடிக்கலாம்! 2026 நியூ இயருக்காக மெட்டா கொண்டு வந்த புது மேஜிக்
  8. இனி Tablet-ல எழுதறது Real-ஆ இருக்கும்! TCL கொண்டு வந்த புது மேஜிக் - Note A1 NxtPaper
  9. போட்டோ எடுக்கும்போது இனி கடுப்பாக வேண்டாம்! Galaxy S26 Ultra-ல இருக்குற அந்த ஒரு ரகசியம்
  10. 200MP கேமரா.. 6000mAh பேட்டரி! Oppo Find N6-ல இவ்வளவு விஷயமா? மிரண்டு போன டெக் உலகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.