சீன செயலியான டிக் டாக்குக்கு மாற்றாக பட்டையை கிளப்பும் ’இந்திய செயலி சிங்காரி’!

இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டார் ரேட்டிங்கில் 5க்கு 4.7 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

சீன செயலியான டிக் டாக்குக்கு மாற்றாக பட்டையை கிளப்பும் ’இந்திய செயலி சிங்காரி’!

சீன செயலியான டிக் டாக்குக்கு மாற்றாக பட்டையை கிளப்பும் ’இந்திய செயலி சிங்காரி’!

ஹைலைட்ஸ்
  • Chingari app is available for free on Apple App Store as well
  • Users can watch short videos without username like TikTok
  • The app is gaining popularity amid rising anti-China sentiment in India
விளம்பரம்

சீன செயலியான டிக் டாக்குக்கு மாற்றாக களமறிங்கிய இந்திய செயலி சிங்காரியை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கும் செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்நிறுவனம் கூறியதாவது, சிங்காரி செயலி 10 நாட்களில் 6 லட்சம் பதிவிறக்கத்தை கண்டது. தற்போது, 25 லட்சம் வரை சென்று அதன் மைல் கல்லை எட்டியுள்ளது. அதேபோல், இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டார் ரேட்டிங்கில் 5க்கு 4.7 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. இந்த செயலியை ஆப்பிள் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில், 5க்கு 3.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அண்மையில், டிக்டாக்கிற்கு மாற்றாக வந்த மித்ரான் செயலியும் கூகுள் ப்ளே ஸ்டாரில் 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கத்தை கொண்டுள்ளது. 

சிங்காரி செயலி என்றால் என்ன?

குறும் வீடியோ பகிர்வு தளமாக விளங்கும் சிங்காரி செயலி பெங்களூரை சேர்ந்த பிஸ்வாத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதம் உள்ளிட்ட 2 புரோகிராமர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலி முதலில் கூகுள் ப்ளேயில் நவம்பர் மாதம் 2018ல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ioS இயங்குதளத்தில் ஜனவரி 2019ல் வெளிவந்தது என அந்நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இந்த சிங்காரி செயலியானது டிக் டாக் செயலியை போன்றது. இது பயனர்களை குறும் வீடியோவை பார்க்கவும், பதிவேற்றம் செய்யவும் அனுமதிக்கும் தளமாக உள்ளது. பயனர்கள் அதில் உள்ள வீடியோவை ஸ்கரால் செய்து பார்க்கலாம். இதில் பார்க்கும் வீடியோவை லைக் செயவும், வீடியோ பதிவேற்றம் செய்யவும், சைன்இன் செய்ய வேண்டும். கூடுதலாக இந்த செயலியானது, ஆங்கிலம், இந்தி, வங்கம், குஜராத்தி, மராத்தி, கன்னடா, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது. 

இந்த செயலி போனில் உள்ள கேமரா, லோக்கேஷன், மைக்ரோபோன் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு அனுமதி கேட்கிறது. இதன் தனிப்பட்ட பாலிசி விவரங்கள் நிறுவன வலைதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிங்காரி செயலி பயனர்கள் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை வேறு பயனர்கள் பார்பதற்கு தகுந்தது போல் புள்ளிகளும் வழங்கப்படுகிறது. இதனை பின்னர் பணமாக எடுக்கும் வகையில் மாற்றப்படலாம் இதைபோல், சிங்காரி செயலியில் டிரெண்டிங் நீயூஸ், எண்டெர்டெயின்மென்ட் செய்தி, மீம்ஸ் உள்ளிட்டவற்றையும் காணலாம்.

சிங்காரி பிரபலமாவதற்கு காரணம் என்ன?

இந்தியாவில், சீன எதிர்ப்பு உணர்வு வளர்ந்து வரும் நிலையில், தற்போது சிங்காரி செயலிக்கு பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். இதேபோல், சமீபத்தில் டிக் டாக்கிற்கு மாற்றாக வந்த மற்றொரு செயலியான மித்ரானும் கூகுள் ப்ளேயில் 1 கோடி பதிவிறக்கம் பெற்றுள்ளது. 

சிறந்த பயனர் அனுபவத்திற்காக செயலியை அறிமுகப்படுத்தியதிலிருந்து நிறுவனம் புதுப்பித்து வருகிறது. இது குறித்து சிங்காரி இணை நிறுவனர் சுமித் கோஷ் கூறுகையில், "நவீன பாரதத்தின் வேகமாக நகரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயனர்களிடமிருந்து வழக்கமான பின்னூட்டங்களுடன் சிங்காரி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்காரி வெளிப்படைத்தன்மை மற்றும் உயர்ந்த தரவு தனியுரிமை தரங்களை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்த செயலி சமூக ஊடகங்களிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பயன்பாட்டிற்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. பவர் பேங்க் இனிமேல் தேவையில்ல! 7,000mAh Battery கூட Oppo புதுசா இறக்குன A6 5G Mobile!
  2. தரமான Budget Phone தேடுறீங்களா? Samsung Galaxy M07-ன் விலையும் Specifications-உம் தெரிஞ்சுக்கோங்க!
  3. Alexa பேசுனா லைட் எரியணுமா? இந்த Amazon சேல்ல Smart Bulbs-க்கு இருக்கிற அதிரடி Deals-ஐ மிஸ் பண்ணாதீங்க!
  4. எப்பவும் போல டைப் பண்ண போரடிக்குதா? Clicky Sound-உடன் Premium Feel கொடுக்கும் Mechanical Keyboards ஆஃபர்!
  5. கரண்ட் பில் கம்மியாகணும்னா இதை வாங்குங்க! 5-Star Rated Washing Machines-க்கு Amazon கொடுக்கும் Mega Discount!
  6. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  7. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  8. Amazon-ன் Great Indian Festival விற்பனையில் JBL, Boat மற்றும் Zebronics Party Speakers-களுக்கு 72% வரை தள்ளுபடி
  9. பட்ஜெட் கவலை இனி இல்லை! Amazon-ன் Great Indian Festival Sale-ல் HP, Lenovo, Dell, Asus Laptops-களுக்கு 40% வரை தள்ளுபடி!
  10. Xiaomi-யின் புதிய ஃபிளாக்ஷிப் போன் Xiaomi 15T Pro உடன் MediaTek Dimensity 9400+ சிப்செட் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »