டிக் டாக்குக்கு மாற்றாக களம் இறங்கி இந்திய செயலியான சிங்காரியை வெளியான 22 நாட்களில் 1 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து, கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு வாரத்திற்கும் மேலாக முன்னணியில் உள்ள முதல் இரண்டு இலவச செயலிகளில் ஒன்றாக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாக, சிங்காரி 25 லட்சம் பதிவிறக்கங்களை மட்டும் கடந்த நிலையில், நாட்டில் டிக்டோக் தடை காரணமாக தொடர்ந்து பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிக்டாக் மீதான தடை அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த பயன்பாடு 30 நிமிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் காண்கிறது என்று செயலியின் இணை நிறுவனர் சுமித் கோஷ் தெரிவித்துள்ளார்.
சிங்கரி செயலியை கூகிள் பிளே ஸ்டோரில் மொத்தம் 1.1 கோடி பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. டிக் டாக் தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்திய மாற்று செயலி மீதான, ஆர்வம் திடீரென அதிகரித்துள்ளது. இதனால், வெறும் 10 நாட்களில் 30 லட்சம் பதிவிறக்கங்களின் மைல்கல்லை எட்டியதாகவும், ஒரு முறை வெறும் 72 மணி நேரத்தில் 500,000 பதிவிறக்கங்களைக் கண்டதாகவும் நிறுவனம் குறிப்பிடுகிறது.
நன்கு அறியப்பட்ட பிரெஞ்சு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் சமீபத்தில் சிங்காரிக்கு பின்னால் உள்ள நிறுவனமான குளோபஸ்சாஃப்டின் வலைத்தளம் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். தளத்தில் மால்வேர் இருப்பதை அவர் குறிப்பிட்டார், மேலும் இது பயனர்களை வலையில் உள்ள பக்கங்களுக்கு திருப்பி விடுகிறது. இதற்கு பதிலளித்த கோஷ், பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று கூறினார்.
சிங்காரி பயனர்கள் தங்கள் வீடியோக்களுக்கு புள்ளிகள் (பார்வைக்கு) பெறுகிறார்கள், பின்னர் அவை பணத்திற்காக மீட்டெடுக்கப்படலாம். டிக்டோக் போன்ற பயன்பாட்டை பெங்களூரைச் சேர்ந்த இரண்டு புரோகிராமர்களான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் நிறுவினர். இது இந்தி, வங்கம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என பல இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இந்த பயன்பாடு முதன்முதலில் கூகிள் பிளேயில் நவம்பர் 2018ல் தொடங்கப்பட்டது, இது 2019 ஜனவரியில் iOSல் அறிமுகமானது.
இந்த செயலி போனில் உள்ள கேமரா, லோக்கேஷன், மைக்ரோபோன் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு அனுமதி கேட்கிறது. இதன் தனிப்பட்ட பாலிசி விவரங்கள் நிறுவன வலைதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிங்காரி செயலி பயனர்கள் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை வேறு பயனர்கள் பார்பதற்கு தகுந்தது போல் புள்ளிகளும் வழங்கப்படுகிறது. இதனை பின்னர் பணமாக எடுக்கும் வகையில் மாற்றப்படலாம் இதைபோல், சிங்காரி செயலியில் டிரெண்டிங் நீயூஸ், எண்டெர்டெயின்மென்ட் செய்தி, மீம்ஸ் உள்ளிட்டவற்றையும் காணலாம்.
இதேபோல், சமீபத்தில் டிக் டாக்கிற்கு மாற்றாக வந்த மற்றொரு செயலியான மித்ரானும் கூகுள் ப்ளேயில் 1 கோடி பதிவிறக்கம் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்