முன்னனி ஷாப்பிங் இணையதளமான அமேசான், வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் டெபிட் கார்டு இஎம்ஐ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது
எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கனரா, சிட்டி, கொடக் மகேந்திர ஆகிய வங்கிகளின் டெபிட் கார்டு பயன்பாட்டாளர்கள் இந்த வசதியை பெற்றுள்ளனர். 3 மாதம் முதல் 12 மாத தவணையில் இஎம்ஐ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது
டெபிட் கார்டு இஎம்ஐ பயன்படுத்துவது எப்படி?
அமேசான் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார், பான் கார்டு ஆகியவற்றை முதலில் சரி பார்க்க வேண்டும். ஆதார் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி எனப்படும் ஒரு முறை கடவுச் சொல் அனுப்பப்படும். பதிவு செய்த பின்னர், வங்கி கணக்குடன் லின்க் செய்ய வேண்டும். குறிப்பாக, 8000 ரூபாய் கொண்ட பொருளை வாங்கினால் மட்டுமே டெபிட் கார்டு இஎம்ஐ வசதி அளிக்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது
மேலும், இந்த வசதி தற்போது மொபைல் போன் ஆப் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. கிப்டு கார்டு, எக்ஸ்சேஞ்ச், ஆகியவற்றை டெபிட் கார்டு இஎம்ஐயில் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்