அமேசானின் மற்றொரு புதிய சேவையான அமேசான் பே தற்போது ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து அமேசான் பே யுபிஐ என்னும் புதிய இணைய பண பரிமாற்ற சேவையை தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு தற்போது ஆண்டிராய்டு மாடல் போன்களில் வெளியாகியுள்ள நிலையில், வாடிக்கையார்களின் வங்கி கணக்குகளை அமேசான் செயலி மூலம் இதில் இணைக்க முடிகிறது.
இந்த அமேசான் பே செயலி மூலம் அமேசான்.காம் மற்றுமின்றி பில்களை செலுத்துவது மற்றும் ரீசார்ஜ்களை கூட செய்துகொள்ள முடியும். ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் மற்ற யூபிஐ வசதிகொண்ட செயலிகள் போலவே அமேசான் பேவும் செயல்படுகிறது.
இந்த யூபிஐ வசதி மூலம் ஒருவர் மீண்டும் மீண்டும் சிவிவி எண்கள் மற்றும் ஓடிபி-களை பதிவு செய்யவேண்டியது இருக்காது. யூபிஐ பின்னை மற்றும் தேர்வு செய்துவிட்டாலே, அதை தேவைப்படும் போது உபயோகப்படுத்திகொள்ள முடியும். அமேசானின் தினசரி யூபிஐ வரம்பு தற்போது 1,00,000 மாக உயர்தபட்டுள்ளது.
இதனால் சற்று விலை உயர்ந்த பொருட்களான வீட்டுக்கு தேவையான ஃபனிச்சர்கள், எலக்டிரானிக்ஸ் மற்றும் பல பொருட்களுக்கு யூபிஐ வசதி மூலம் பணம் செலுத்திவிட முடிகிறது. மேலும் இந்த சேவை விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கும் அப்டேட் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்