அமேசான் நிறுவனம் தனது இணையதளம் மூலம் பில் கட்டணங்கள் செலுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனி மின் கட்டணம், மொபைல் கட்டணம், பிராட்பேண்ட், டி.டி.எச் போன்ற பல சேவைகளுக்கான கட்டணங்களைச் செல்லுத்தலாம். மேலும், அமேசான் பே கணக்கு மூலம் ஒரே டச்சில் எளிதாக கட்டணமும் செலுத்தும் அம்சமும் கொடுக்கப்படுகிறது.
100 வகையான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அமேசான் மூலம் கட்டணம் செலுத்தலாம். ஏர்டெல், டாடா பவர், வோடாஃபோன், ரிலையன்ஸ் ஜியோ, ஏ.சி.டி ஃபைபர்னெட், ஹாத்வே போன்ற நிறுவனங்களுக்கான சேவைகளின் கட்டணத்தை அமேசான் பே மூலம் செலுத்தலாம்.
மேலும் சில தொலை தொடர்பு, டி.டி.எச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு ஆஃபர்களையும் வழங்க இருக்கிறது. அமேசான் பே மூலம் மின் கட்டணம் செலுத்தினால் 10% வரை கேஷ்பேக் (அதிகபட்சம் 75 ரூபாய்) கிடைக்கும். லேண்ட்லைன், பிராட்பேண்ட் கட்டணம் செலுத்தினால், 10% (அதிகபட்சம் 50 ரூபாய்) வரை கேஷ்பேக் கிடைக்கும். 198 ரூபாய்க்கு மொபைல் ரீச்சார்ஜ் செய்தால் 50 ரூபாயும், 398 ரூபாய்க்கு முதல் முறை ரீச்சார்ஜ் செய்தால் 75 ரூபாய் தள்ளுபடியும், அடுத்தடுத்த ரீச்சார்ஜ்களுக்கு 30 ரூபாயும் தள்ளுபடி கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்