Photo Credit: Amazon
அமேசான் இந்தியா பகுதி நேர டெலிவரி வேலைக்கான அறிவிப்பை செய்துள்ளது. இதனை அமேசான் ஃப்ளெக்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையினை பகுதிநேரமாக செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. இதன் மூலம் மணிக்கு ரூ.140 சம்பாதிக்க முடியும். உங்களின் அன்றாட பணிகளுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
அமேசான் ஃப்ளெக்ஸில் இணைய விரும்பினால் அதற்கான ஆப்பை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் அவசியம் தேவை. அல்லது மூன்றோ நான்கு சக்கரம் வைத்திருக்கிறீர்களா என்பதை குறிப்பிட வேண்டும். ஆண்ட் ராய்டு மொபைல் கட்டாயம் தேவை. ஆண்ட்ராய்டு ஃப்ளெக்ஸ் ஆப் ஆண்ட்ராய்டில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த திட்டம் தனி நபர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பகுதி நேர வேலையினை வழங்கி சம்பாதிக்கும் வாய்ப்புகளை வழங்கும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் ப்ளெக்ஸ் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கூடுதல் நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் ஃப்ளெக்ஸ் வலைதளத்தை பார்வையிட்டு மேலதிக தகவலை தெரிந்து கொள்ளலாம்.. அமேசான் ஃப்ளெக்ஸ் திட்டம் முதலில் அமெரிக்காவில் 2015 இல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அமேசன் ஃப்ளெக்ஸ் கீழ் பணிபுரிபவர்களுக்கு குழு விபத்து காப்பீட்டின் கீழ் வருவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறவர்களின் பிண்ணனியை சரிபார்த்து செயல்முறை பயிற்சிகள் கொடுத்த பின்பே அமேசானில் டெலிவரிக்கான பொருட்கள் கொடுக்கப்படும்.
நாடு முழுவதும் விநியோகத் திறன்களை அதிகரிக்கவே அமேசான் ஃப்ளெக்ஸ் இந்த வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்