Photo Credit: App Store
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Instagram தரப்போகும் எடிட் ஆப்ஷன்கள் பற்றி தான்
வீடியோக்களை சிறப்பாக எடிட் செய்யும் வகையில் Instagram புதிய ஆப்ஷன்களை திங்களன்று அறிவித்தது. இதன் மூலம் தற்போது உள்ளதை விட படைப்பாளிகள் தங்கள் வீடியோக்களை இன்னும் அதிக துல்லியத்துடன் எடிட் செய்யலாம். வீடியோக்களுக்கான பிரத்யேக தெளிவுத்திறன், பிரேம் வீதம் மற்றும் டைனமிக் ரேஞ்சிற்கான கேமரா அமைப்புகள் போன்ற ஆக்கப்பூர்வமான எடிட் தொகுப்புடன் மொபைல் வீடியோ எடிட்டிங் செய்ய சூப்பர் ஆப்ஷனாக வருகிறது. எடிட்ஸ் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) திறனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது அனிமேஷன்களை வழங்குவதாகவும் உறுதியளிக்கிறது.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி Instagram's Edits App பற்றி பேசியுள்ளார். ஸ்மார்ட்போன்களில் வீடியோக்களை உருவாக்க ஆர்வமுள்ள பயனர்களுக்காக இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்தரக் காட்சிகளின் எடிட்டிங்
செயல்முறையை எளிதாக்குவதாகக் கூறப்படுகிறது. வாட்டர்மார்க் இல்லாமல் வீடியோக்களை எடிட் செய்யலாம். 1080p தெளிவுதிறனில் Instagram உட்பட தளங்களில் அவற்றைப் பகிரலாம். மேலும் ஒரு புதிய டேப் அவர்களின் அனைத்து வரைவுகளையும் வீடியோக்களையும் ஒரே இடத்தில் கண்காணிக்க உதவுகிறது.
ஆப் ஸ்டோரில் iOS பயனாளர்களுக்கு முன்கூட்டிய ஆர்டருக்காக எடிட்ஸ் ஆப் தற்போது கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்டில் கிடைக்கும் என்று Instagram கூறுகிறது. இது அடுத்த மாதம் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேம் வீதம், தெளிவுத்திறன் மற்றும் டைனமிக் வரம்பிற்கு ஏற்ப படைப்பாளர்கள் தங்கள் கேமரா அமைப்புகளை சரிசெய்யலாம். இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும்போது இது மேம்பட்ட ஃபிளாஷ் மற்றும் ஜூம் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. AI அனிமேஷன் உள்ளிட்ட AI திறன்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், பயனர்கள் தங்கள் பின்னணியை பச்சைத் திரையில் மாற்றவோ அல்லது வீடியோ மேலடுக்கைச் சேர்க்கவோ பயன்பாடு அனுமதிக்கிறது.
பலதரப்பட்ட எழுத்துருக்கள், ஒலி மற்றும் குரல் விளைவுகள், வீடியோக்களுக்கான வடிப்பான்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் பிறவற்றை தேர்ந்தெடுக்கலாம். பின்னணி இரைச்சலை அகற்றவும், தெளிவான ஆடியோவை வழங்கவும் ஆடியோவை மேம்படுத்துவதாகக் கூறுகிறது. இன்ஸ்டாகிராமின் புதிய எடிட்ஸ் ஆப் வீடியோ எடிட்டிங் செய்வதை விட அதிகமாக ஆப்ஷன்களை வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்