நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியாவில் இதுவரை 4,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 109 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்திய அரசு 'ஆரோக்ய சேது' என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி, பயனர்களின் புளூடூத் மற்றும் இருப்பிடத்தைப் பயன்படுத்தி, வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டுள்ளார்களா என்பதை கண்டறிய உதவுகிறது.
ஆரோக்ய சேது அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நாட்களில், கூகுள் பிளே ஸ்டோரில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்துள்ளது. ஆப் ஸ்டோரில் உடல்நலம் மற்றும் உடற்தகுதி பிரிவில் ஆரோக்ய சேது முதலிடத்தில் உள்ளது.
ஆரோக்ய சேது செயலி, கோவிட்-19 தொடர்பான அபாயங்கள், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே வழங்குகிறது. செயலியில் உள்ள அனைத்து தகவல்களும் அரசின் சுகாதாரத் துறையால் சரிபார்க்கப்பட்டது.
இந்த செயலியை, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊழியர்கள் மற்றும் பிற குடும்பத்தினரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு (சிபிஎஸ்இ வாரியம்) அனைத்து பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் பரிந்துரைத்துள்ளது.
இந்தி, குஜராத்தி, மராத்தி, மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகள் உள்ளன.
இந்த செயலி, புளூடூத் மற்றும் இருப்பிடத்தை அணுகுமாறு கேட்கிறது.
பதிவுசெய்யும் போது, “உங்கள் டேட்டா இந்திய அரசாங்கத்துடன் மட்டுமே பகிரப்படும்".
இந்த செயலி, எந்த நேரத்திலும் உங்கள் பெயரையோ எண்ணையோ பொதுமக்களுக்கு வெளிப்படுத்த அனுமதிக்காது”.
Google Play Store அல்லது App Store மூலம், இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்