விமானப் பயணத்திற்கு 'ஆரோக்ய சேது' செயலி கட்டாயம்!

விமானப் பயணத்திற்கு 'ஆரோக்ய சேது' செயலி கட்டாயம்!

இந்தியாவில் தொற்றைக் கண்டுபிடிப்பதற்காக ஆரோக்ய சேது செயலி ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது

ஹைலைட்ஸ்
  • விமான பயணத்திற்கும் ஆரோக்கிய சேது செயலி அவசியம்
  • கிரீன் சிக்னல் உள்ள பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதி
  • விமான நிலையத்தில் செயலியுடன் முகமூடிகள் & கையுறைகள் கட்டாயமாகும்
விளம்பரம்

'Aarogya Setu' செயலி இப்போது விமான பயணத்திற்கும் கட்டாயமாகிவிட்டது. கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது, ​​ரயில் பயணம் முன்பே தொடங்கப்பட்டது, இப்போது உள்நாட்டு விமானங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், விமான பயணத்தைத் தொடங்குவதற்கு முன், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI - Airports Authority of India), வழிமுறைகளை (SOP - Standard Operating Procedure) வெளியிட்டுள்ளது. அதன்படி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனில் 'ஆரோக்கிய சேது ஆப்' இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

மே 25 முதல் உள்நாட்டு விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், செயலியைத் தவிர, முகமூடிகள், கையுறைகள் மற்றும் பயணிகளின் தெர்மல் ஸ்கிரீனிங்-ம் கட்டாயமாக இருக்கும்.


வழிமுறைகள்:

AAI ஆவணங்களின்படி, அனைத்து பயணிகளும் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'ஆரோக்ய சேது' செயலியில் பதிவு செய்வது கட்டாயமாக இருக்கும், இது நுழைவு வாயிலில் உள்ள CISF / விமான நிலைய ஊழியர்களால் சரிபார்க்கப்படும். விமானத்தில் பயணம் செய்ய விரும்பும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கட்டாயம் பொருந்தாது என்றும் AAI குறிப்பு குறிப்பிடுகிறது. 

மேலும், ஆரோக்ய சேது செயலியில் 'கிரீன் சிக்னல்' கிடைக்காத பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்னதாக, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆரோக்ய சேது செயலி இன்ஸ்டால் செய்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வர வேண்டும். அடுத்த 4 மணி நேரத்திற்குள் யாருடைய விமானம் புறப்படவுள்ளதோ அந்த நபர்களை மட்டும் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்..

பயணிகள் நுழைவதற்கு முன்பு, வெப்ப பரிசோதனை செய்யப்படும். ஸ்கிரீனிங் மண்டலங்கள், நுழைவு வாயில்கள் மற்றும் விமான நிலைய முனையங்கள் போன்றவற்றில் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்படும்.

இருப்பினும், ஸ்மார்ட்போன் அல்லது Jio Phone இல்லாத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பார்களா இல்லையா என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. ஆரோக்கிய சேது செயலி ஆண்ட்ராய்டு, iOS மற்றும் KaiOS-based Jio Phone models-க்கு கிடைக்கிறது. 


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Aarogya Setu, AAI, Civil Aviation, Airports Authority of India
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அசர வைக்கும் வசதிகளுடன் PhonePe கொண்டு வந்துள்ள UPI Circle அம்சம்
  2. Honor Power செல்போன் சீனாவில் வெற்றிகரமாக அறிமுகமாகி அமர்க்களம்
  3. கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கக்கூடிய Realme 14T வருகிறது
  4. சாம்சங் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் Galaxy S25 Ultra
  5. Oppo K13 5G செல்போன் 67W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் வெளியாகிறது
  6. Realme நிறுவனத்தின் Narzo 80 5G மற்றும் Narzo 80x 5G மாடல் செல்போன்கள் அறிமுகம்
  7. Motorola Edge 60 Stylus அட்டகாசமாக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது
  8. Huawei நிறுவனம் அறிமுகப்படுத்திய Huawei Watch Fit 3 ஸ்மார்ட்வாட்
  9. IPL போட்டிகளை முன்னிட்டு IPL 251 Prepaid ரீசார்ஜ் அறிமுகம் செய்தது BSNL
  10. AMOLED திரையுடன் வருகிறது புதிய Honor 400 Lite ஸ்மார்ட்போன்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »