ஆரோக்ய சேது மொபைல் செயலியை, இதுவரை 9 கோடி பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில பதில்கள் கோவிட்-19 அறிகுறிகளைக் கூறினால், அந்த தகவல் அரசாங்க சேவையகத்திற்கு அனுப்பப்படும்
இதுவரை ஸ்மார்ட்போனில் மட்டுமே 'Aarogya Setu' செயலியை பயன்படுத்த முடியும். இப்போது கீபேட் போன் மற்றும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களும் 'Interactive Voice Response System' (IVRS) மூலம் 'ஆரோக்ய சேது' செயலியை பயன்படுத்த முடியும்.
மக்கள் எந்த போனிலிருந்தும் 1921 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம், சுகாதார அமைச்சகம் தொற்று அபாயம் குறித்து சில கேள்விகளைக் கேட்க உங்களுக்கு மீண்டும் அழைப்பு வரும்.
எந்தவொரு குடிமகனும் coronavirus-ஆல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றால், அவர்கள் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கப்படுவார்கள். ஏற்கனவே முழு நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை நெருங்குகிறது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறித்து குடிமக்களை எச்சரிக்க சுகாதார அமைச்சகம் ஆரோக்ய சேது செயலியை இன்ஸ்டால் செய்யுமாறு பலமுறை கோரியுள்ளது.
#IndiaFightsCorona:#AarogyaSetu IVRS services implemented to cater to people having feature phone or landline.
— Ministry of Health ???????? #StayHome #StaySafe (@MoHFW_INDIA) May 6, 2020
Details here:https://t.co/NqjXUJ6YZQ#SwasthaBharat#COVID19@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @COVIDNewsByMIB @CovidIndiaSeva @DDNewslive
புதன்கிழமை, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை மையம் தள்ளுபடி செய்து, ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவது வாடிக்கையாளரின் தனியுரிமையை மீறாது என்று கூறியது.
இந்த தகவல் முற்றிலும் வலுவானது மற்றும் பாதுகாப்பானது என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் கூறினார்.
'ஆரோக்ய சேது' செயலி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு Google Play ஸ்டோரிலும், ஐபோன் பயனர்களுக்கு App Store-லும் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Poco M8 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More
Oppo Reno 15 Series 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More