நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் விதமாக இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக இந்திய அரசு தனது கோவிட்-19 டிராக்கர் செயலியான 'ஆரோக்ய சேது'-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி, பயனர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா?, வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தார்களா? என்பதை அடையாளம் காண உதவுகிறது. மேலும், வைரஸ் பற்றிய ஆலோசனைகள் பற்றி மக்களுக்கு "முன்கூட்டியே" தெரிவிக்கும் முயற்சிகளை "அதிகரிப்பதை" நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரோக்ய சேது செயலி, தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த வாரம் CoWin-20 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ்-டிராக்கர் செயலியை, நிதி ஆயோக் உருவாக்கியது. அதை தொடந்து, மாநில மற்றும் மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொடர்பான செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த வைரஸ் டிராக்கர் செயலியை, இந்தி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் பயன்படுத்தலாம்.
ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த புளூடூத் மற்றும் இருப்பிட அணுகல் தேவை.
செயலியை பயன்படுத்த, பயனர்கள் முதலில் தங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும்.
செயலியின் Privacy Policy பற்றி கவலைப்படுபவர்களுக்கு, இது சேமிக்கப்பட்ட டேட்டா "encrypted" என்று அரசு கூறுகிறது.
ஆரோக்ய சேது செயலி, பயனர்களின் இருப்பிடத்தின் அடிப்படையில், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பதை சொல்கிறது.
செயலியின் ஆண்ட்ராய்டு பயனர்கள், சுகாதார அமைச்சகத்தின் லைவ் ட்வீட்களையும் பார்க்கலாம்.
செயலி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பற்றிய ஆலோசனைகளை வழங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்