13 நாட்களில் 5 கோடி பயனர்கள்! - 'ஆரோக்ய சேது' செயலியின் புதிய மைல்கல்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 ஏப்ரல் 2020 12:36 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் வைரஸ் தொற்றை டிராக் செய்ய ஆரோக்ய சேது செயலி உதவுகிறது
  • பயனர்களின் உடல்நிலையைப் புரிந்துகொள்ள இது கேள்விகளைக் கேட்கிறது
  • ஆரோக்ய சேது செயலி செவ்வாய்க்கிழமை 4 கோடி பயனர்களை கடந்தது

ஆரோக்யா சேது செயலியை ஏப்ரல் 2-ஆம் தேதி அரசு அறிமுகப்படுத்தியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை டிராக் செய்ய, ஏப்ரல் 2-ஆம் தேதி 'Aarogya Setu' என்ற செயலியை அரசு வெளியிடப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நாட்களில், 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி புதிய மைல்கல்லை தொட்டது. இப்போது, 13 நாட்களில் ஐந்து கோடி பயனர்களை கடந்து மற்றோரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று உரையாற்றும் போது, செயலியை பதிவிறக்க ஊக்குவித்தார். அதன் பின், ஒரு நாளில் ஒரு கோடி புதிய பயனர்கள் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) போன்ற கல்வி வாரியங்கள் ஆரோக்யா சேது செயலியை ஊக்குவித்துள்ளன. மேலும், சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர்லா வல்லுநர்கள் செயலி பயன்படுத்தும் அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் அது கொண்டு செல்லும் privacy policy-யின் அடிப்படையில் தனியுரிமை கவலைகளை எழுப்பியுள்ளனர்.

இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் (Internet Freedom Foundation - IFF) இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், ஆரோக்ய சேது செயலியில் “வெளிப்படைத்தன்மை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த, பயனர்கள் புளூடூத் மற்றும் இருப்பிட அணுகலை வழங்க வேண்டும். coronavirus தொற்று அபாயத்தில் உள்ளதா என்பதை அடையாளம் காண, பயனர்களிடம் கேள்விகளைக் கேட்கும். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தால், உங்களுக்கு ஒரு தகவலை தெரிவிக்கும். இந்த செயலி, Android மற்றும் iOS சாதனங்களில் பதிவிறக்கம் செய்யலாம். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Aarogya Setu app, Aarogya Setu, NITI Aayog, COVID 19, Coronavirus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  2. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  3. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  4. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  5. புதிய அடோப் மற்றும் கான்வா கனெக்டர்கள் மூலம் ஏஜென்டிக் வடிவமைப்பு உருவாக்கத்தை வழங்குகிறது கூகுளின் ஜெமினி
  6. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் விவோ X300 அல்ட்ரா: இதில் எது சிறந்தது?
  7. ஒப்போ ரெனோ 16 ,ரெனோ 16 கேமரா விவரம் டீஸ் செய்யப்பட்டது; இந்திய அறிமுக காலம் ஆன்லைனில் வெளியானது
  8. விவோ S தொடர் S2 மூலம் மீண்டும் இந்தியாவிற்கு: அறிமுக காலம், விலை விவரம் கசிந்தது
  9. HMD வைப் 2 5G இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, 128GB வரை சேமிப்பகம்: விலை, விவரக்குறிப்புகள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.