ஆரோக்ய சேது செயலி இந்தியாவில் வேகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்களைப் பெற்றது. இப்போது சமீபத்திய தகவல்களின்படி, ஆரோக்ய சேது செயலி 7.5 கோடி (75 மில்லியன்) முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இலவச செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது.
ஆரோக்யா சேது செயலி ஏப்ரல் 2-ஆம் தேதி நிதி ஆயோக்கால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய தகவல்களை மறுஆய்வு கூட்டத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, இந்த செயலி "கோவிட் -19-ஐ எதிர்த்துப் போராடுவதில் மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாகும்" என்று கருதுகிறார்.
ஆரோக்ய சேது செயலியில் தனியுரிமை கவலைகள் முன்னிலைக்கு வந்திருந்தாலும், பிரதமர் மோடியும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) இதை பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்த பின்னர், இந்த செயலியின் வளர்ச்சி நிறுத்தப்படுவது சாத்தியமில்லை.
செயலியை முடிந்தவரை விளம்பரப்படுத்துமாறு தோத்ரே அதிகாரிகளிடம் கேட்டார். கொரோனோவைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு துறைகள் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
மனிதகுலத்திற்கு சேவை செய்ய அரசாங்கத்திற்கு ஒரு "வரலாற்று வாய்ப்பு" இருப்பதாகவும், அது "முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்க ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும்" என்றும் தோத்ரே கூறியதாக அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
ஆரோக்ய சேது செயலி, பயனர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்களா என்று சொல்ல, இருப்பிடம் மற்றும் புளூடூத் தரவைப் பயன்படுத்துகிறது. இந்த செயலி, கொரோனா வைரஸுக்கு சாதகமான ஒருவருடன் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளார்களா என்பதையும் பயனர்களுக்குக் கூறுகிறது.
வேகமாக வளர்ந்து வரும் ஆரோக்ய சேது செயலியில் பயனர்களின் தனியுரிமை குறித்து அதிகரித்து வரும் கவலைகள் உள்ளன. Software Freedom Law Centre (SFLC.in)-ன் பதிவின்படி, இந்த செயலி பயனரின் பாலினம் மற்றும் பயணத் தகவல் போன்ற முக்கியமான தனிப்பட்ட தரவை சேகரிக்கிறது, பின்னர் அவை க்ளவுடில் சேமிக்கப்படும்.
"இந்த செயலி, தொடர்ந்து பதிவுசெய்த பயனரின் இருப்பிடத் தரவை எடுத்து, பயனர் பதிவுசெய்த பிற பயனர்களுடன் தொடர்பு கொண்ட இடங்களின் பதிவை சேமிக்கிறது". இங்கே கவலைக்குரிய முக்கிய அம்சம் என்னவென்றால், ஆரோக்ய சேது செயலி ரிவர்ஸ் பொறியியலையும் கட்டுப்படுத்துகிறது. அதாவது பாதுகாப்பு ஆய்வாளர்கள் எந்த வகையான தனியுரிமை தொடர்பான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதைத் தடுக்கிறது. ஜி.பி.எஸ் தரவைப் பயன்படுத்துவது குறித்த கவலைகளும் உள்ளன என்று SFLC.in குழு பகிர்ந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்