Photo Credit: Google Play
Dor Play பயன்பாடு ஸ்மார்ட்போன்களில் பிரத்தியேகமாக ஆதரிக்கப்படுகிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது Dor Play செயலி பற்றி தான்.
இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியாவால் Dor Play செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. Dor Play செயலி யுனிவர்சல் தேடல் அம்சத்தை வழங்குகிறது. இந்த செயலி 20க்கும் மேற்பட்ட OTT தளங்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை பார்க்கும் வசதி வழங்குகிறது. ஒவ்வொரு ஸ்ட்ரீமிங் சேவை அல்லது சேனலுக்கும் தனித்தனியாக பதிவு செய்வதற்குப் பதிலாக, பயனர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயலிக்கு குழுவாக தேர்வு செய்யலாம். கடந்த ஆண்டு, நிறுவனம் டோர் டிவி OS உடன் டோரை அறிமுகப்படுத்தியது, இது சந்தா அடிப்படையிலான தொலைக்காட்சி சேவையை வழங்குகிறது. குறிப்பாக, ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியா நவம்பர் 2024ல் அதன் டோர் QLED ஸ்மார்ட் டிவிகளை வெளியிட்டது.
பயனர்கள் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக, நிறுவனம் Trending மற்றும் Upcoming என்ற இரண்டு தனித்துவமான பிரிவுகளை வழங்கியுள்ளது. இந்த செயலியில் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த உள்ளடக்கத்தை ஒரே தேடலில் கண்டறிய உதவுகிறது. டோர் பிளேயின் இடைமுகம் மற்ற நிறுவனங்களின் செயலிகளை விட மிகவும் எளிதானது. இரண்டு தனித்துவமான பிரிவுகளைக் கொண்டிருப்பதால், புதிய பொழுதுபோக்கு புதுப்பிப்புகளும் கிடைக்கும்.
நீங்கள் டோர் ப்ளேயின் சந்தாவைப் பெற விரும்பினால், அதன் 3 மாத கட்டணம் 400 ரூபாய்க்கும் குறைவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்த செயலியின் சந்தா ரூ.399 மட்டுமே. ரூ. 399 சந்தாவைப் பெறுவதன் மூலம், நீங்கள் 3 மாதங்களுக்கு செயலியை பயன்படுத்த முடியும். இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட்டில் இருந்து டோர் ப்ளே செயலியின் சந்தாவைப் பெறலாம். சந்தாவை வாங்கிய பிறகு, உங்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும், அதை நீங்கள் உங்கள் மொபைல் எண்ணுடன் ஆக்டிவேட் செய்ய முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில் டோர் ப்ளே செயலியும் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் பட்டியலின்படி, டோர் ப்ளே 20க்கும் மேற்பட்ட OTT தளங்கள் மற்றும் 300 டிவி சேனல்களிலிருந்து உள்ளடக்கத்தை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. இது நேரடி விளையாட்டு, திரைப்படங்கள், ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கற்பனையான டிவி தொடர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான
பொழுதுபோக்குகளை ஒன்றிணைக்கிறது. பல பயன்பாடுகளுக்கு இடையில் மாறாமல் பயனர்கள் வெவ்வேறு தளங்களிலிருந்து உள்ளடக்கத்தை பார்க்க முடியும்.
தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்திற்காக, டோர் ப்ளே ஸ்மார்ட் ஃபில்டர்களை வழங்குகிறது, இது பயனர்கள் மகிழ்ச்சி, ஏக்கம், சாகசம் மற்றும் பல போன்ற மனநிலைகளின் அடிப்படையில் உள்ளடக்கத்தைக் கண்டறிய உதவுகிறது. மனநிலை சார்ந்த ஃபில்டர்கள் மூலம், பயனர்களின் விருப்பமான மனநிலைகளுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை ஆப் பரிந்துரைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்