மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 25 நவம்பர் 2025 08:00 IST
ஹைலைட்ஸ்
  • AI & LLM: 7 பில்லியன் AI Models-ஐ காருக்குள்ளேயே இயக்கும் திறன்
  • முதல் முறையாக கார் காக்பிட்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த Ray-Trac
  • ஸ்மார்ட் காக்பிட்: இன்ஃபோடெயின்மென்ட், 360° கேமரா, வாய்ஸ் அசிஸ்டென்ட்

P1 Ultra: ரே-ட்ரேசிங் GPU, 4nm, 5G, 7B AI மொடல் சப்போர்ட்.

Photo Credit: MediaTek

நம்ம எல்லாரும் MediaTek கம்பெனியைப் பத்தி பேசுனாலே, உடனே அது போன் ப்ராசஸர் பத்திதான்னு நினைப்போம். ஆனா, இப்போ அவங்க பெரிய லெவல்ல ஒரு மாஸ் ஐட்டத்தை வெளியிட்டிருக்காங்க. அது என்னன்னா, கார்களுக்காக பிரத்யேகமா வடிவமைக்கப்பட்ட Dimensity P1 Ultra என்ற புதிய சிப்செட் தான். இந்த சிப், ஒரு சாதாரண ப்ராசஸர் இல்லை. இது 4nm டெக்னாலஜில தயாரிக்கப்பட்ட ஒரு Automotive SoC (System on Chip). அதாவது, காருக்குள்ள இருக்கிற அத்தனை ஸ்மார்ட் வேலைகளையும் இந்த ஒரே சிப் பார்த்துக்கும்.

Real-Time Safety Monitoring

இனிமேல் வரப்போற புதிய கார்களை, ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன் மாதிரி மாத்துறது தான் இந்த சிப்போட முக்கியமான வேலை. இதோட Core அம்சங்களைப் பார்த்தா, இதுல 8-Core கொண்ட CPU இருக்கு. கூடவே, 23 TOPS (Tera Operations Per Second) திறன் கொண்ட ஒரு பவர்ஃபுல் NPU (AI Chip) கொடுக்கப்பட்டிருக்கு. இது என்ன பண்ணும்னா, 7 பில்லியன் AI Models வரை காருக்குள்ளேயே, அதாவது ஆன்-டிவைஸிலேயே இயக்கும் திறன் கொண்டதாம். இதனால, கிளவுட் சப்போர்ட் இல்லாமலே மேம்பட்ட வாய்ஸ் கன்ட்ரோல்கள், காருக்குள்ளேயே Image Generation, மற்றும் ரியல்-டைம் பாதுகாப்பு கண்காணிப்பு (Real-Time Safety Monitoring) போன்ற பல AI Features-களை பயன்படுத்த முடியும்.

அதுமட்டுமில்லாம, கேமிங் உலகத்தையே புரட்டிப் போட்ட Ray-Tracing GPU-வும் இந்த சிப்ல இருக்கு. ஒரு கார் சிப்ல Ray-Tracing GPU இருக்குறது இதுதான் முதல் முறை. இதனால, இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன்ல கிராபிக்ஸ் மற்றும் லைட்டிங் எஃபெக்ட்ஸ் ரொம்பவே ரியலிஸ்டிக்கா இருக்கும். டிஜிட்டல் டேஷ்போர்டு, பின் சீட்ல இருக்கிற என்டர்டெயின்மென்ட் டிஸ்பிளேக்கள்ன்னு காருக்குள்ளேயே அதிகபட்சமா ஆறு டிஸ்பிளேக்களை ஒரே நேரத்துல இந்த சிப்ல சப்போர்ட் பண்ணும். மேலும், 4K 60fps வீடியோவை பார்க்கவும் ரெக்கார்டு செய்யவும் முடியும். MediaTek-ன் MiraVision தொழில்நுட்பம் இந்த விஷுவல் அனுபவத்தை மேலும் கூட்டும்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டியைப் பத்தி பார்த்தா, 5G, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், GNSS போன்ற பல தொழில்நுட்பங்கள் இந்த சிப்புக்குள்ளேயே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கு. 360° கேமரா காட்சிகள், கேபின் கண்காணிப்பு, நேவிகேஷன் என ஒரு Smart Cockpit-க்கு தேவையான எல்லாமே இந்த ஒரே சிப்ல இருக்கு. செலவைக் குறைக்கும் விதமாக, இந்த சிப்பில் காக்பிட் சிஸ்டம், கனெக்டிவிட்டி மாட்யூல் மற்றும் T-BOX ஆகியவற்றை ஒரே பிளாட்ஃபார்மில் கொண்டு வந்துள்ளது MediaTek. இந்த Dimensity P1 Ultra சிப்செட் கொண்ட முதல் கார்கள் சீக்கிரமே ரோட்டுக்கு வரப்போகுதுன்னு MediaTek சொல்லியிருக்காங்க. மொத்தத்துல, எதிர்கால கார்களை AI மற்றும் கேமிங் லெவல் கிராபிக்ஸ் சப்போர்ட்டோட ஸ்மார்ட்டா மாத்த இந்த சிப் ஒரு பெரிய கேம் சேஞ்சரா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது!



(Disclaimer: New Delhi Television is a subsidiary of AMG Media Networks Limited, an Adani Group Company.)

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: MediaTek, Dimensity P1 Ultra, powerful AI, GPU

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  2. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  3. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  4. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  5. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
  6. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  7. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  8. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  9. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  10. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.