மைக்ரோசாப்ட்டின் செய்தி வாசிக்கும் செயலி வெளியானது!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 17 டிசம்பர் 2018 12:14 IST

அமெரிக்காவில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடிகிற ஹம்மிங்போர்டு செயலி.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எம்.எஸ்.என் செய்தி செயலியை, மைக்ரோசாப்ட் நியூஸ் செயலிலையை புதிதாக மாற்றி அண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் மென்பொருட்களில் பயன்படும்விதமாக  வெளியிட்டது. இந்த புதிய செய்திதரும் செயலி, 28 மொழிகளில் பயன்படுத்த முடியும் என்றும் பல தலைப்புகளை பற்றி புதிய தகவல்களை வாடிகையாளர்களிடம் சேர்ப்பதால், இந்த செயலியின் மூலம் செய்தி வாசிப்பு மக்களிடையே அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

ஹம்மிங் ப்பேர்டு என்றழைக்கப்படும் இச்செயலியில், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான செய்திகளை பார்க்கமுடியும் மேலும் எல்லாதுறையிலும் உள்ள உடனுக்குடன் விபரங்களை தானாகவே வாடிக்கையாளர்க்கு மூன் காட்டும். 

அமெரிக்காவில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடிகிற ஹம்மிங்போர்டு செயலி, அண்ட்ராய்டில் மட்டுமே கிடைக்கிறது.
மேலும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)  முறையில் பயனாளர்களின் விருப்பத்தை அறிந்துகொண்டு, தொழிநுட்பம், விளையாட்டு, அரசியல், வணிகம் போன்ற அனைத்து செய்திகளின் கலவையாக செய்தி வரிசையை அமைக்கும். 

மேலும் பயன்பாட்டாளர்களால் அதை லைக் மற்றும் டிஸ்லைக் செய்யவும் முடியும். மேலும் இத்தகவல்களை நண்பர்களிடம் சமூக ஊடகங்களில் பகிரவும் முடிகிறது.

பயனாளியின் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு (+) என்னும் பட்டனை அழுத்தினால் தனக்கு விருப்பமான தலைப்பு மற்றும் துறைகளை தேர்வு செய்ய முடியும். முக்கிய வாக்கியங்களை கொண்டு தேடுதல் நடத்தி விருப்பமான செய்திகளை படிக்கவும் நேரிடலாம்.

மேல் குறிப்பிட்டதுபோல் அமெரிக்காவில் மட்டுமே தற்போதைக்கு பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்படும் என்ற நிலையில் ஏ.பி.கே மிரர் என்னும் செயலி மூலம் மற்ற நாடுகளில் உள்ளவர்களும் பதிவிறக்கம் செய்யமுடியும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Microsoft, Hummingbird app, Android
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.