Lenovo Smart Display 7, Smart Bulb மற்றும் Smart Camera இந்தியாவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 டிசம்பர் 2019 11:28 IST
ஹைலைட்ஸ்
  • புதிய அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை Lenovo அறிமுகப்படுத்தியுள்ளது
  • Smart Display 7, Smart Bulb & Smart Camera அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
  • Smart Display 7-ன் விலை ரூ. 8,999 ஆகும்

7-inch Smart Display காட்சி குறிப்புகளுடன் Google Assistant-ஐக் கொண்டுள்ளது

லெனோவா (Lenovo) அதன் பீசி (PCs), மடிக்கணினிகள் (laptops) மற்றும் கம்ப்யூட்டிங் தயாரிப்புகளுக்கு (computing products) மிகவும் பிரபலமானது. ஆனால், சீன நிறுவனமும் ஸ்மார்ட் சாதனங்கள் பிரிவை, தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. நிறுவனம் இப்போது இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது - Lenovo Smart Display 7, Lenovo Smart Bulb மற்றும் Lenovo Smart Camera. Smart Display 7-ன் விலை ரூ. 8,999 ஆகும், மற்ற இரண்டு தயாரிப்புகளின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை வரும் வாரங்களில் அறிவிக்கும். மூன்று தயாரிப்புகளும், ஸ்மார்ட் ஹோம் இணைப்பு (smart home connectivity) மற்றும் தொலைநிலை செயல்பாட்டை (remote functionality) வழங்க Google Assistant-ஐப் பயன்படுத்துகின்றன.

புதிய தொடரின் முதல் தயாரிப்பு Lenovo Smart Display 7 ஆகும், இது நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் காட்சிகளின் ஒரு பகுதியாகும். Smart Display 7-ன் விலை ரூ. 8,999,  Lenovo Smart Clock-ன் விலை ரூ. 5,999 மற்றும் Lenovo Smart Display-வின் விலை ரூ. 14,999. சாதனம் 7-inch டிஸ்பிளே மற்றும் முழு காட்சி குறிப்புகளுடன் Google Assistant-க்கான ஆதரவைக் கொண்டுள்ளது; பயனர்கள் எப்போதும் இயங்கும் மைக்ரோஃபோன் மூலம் Google Assistant-க்கு குரல் கட்டளைகளை வழங்க முடியும்.

டிஸ்பிளேவுக்கு நன்றி, குரல் மறுமொழிகள் மூலம் Google Assistant பதிலளிப்பது மட்டுமல்லாமல், music album art, navigation மற்றும் maps, weather மற்றும் news போன்ற தொடர்புடைய தகவல்களை திரையில் காண்பிக்க முடியும். திரைக்கு கீழே இருக்கும் ஸ்டீக்கர் உடன் ரூ. 14,999 Smart Display-வை விட Lenovo Smart Display 7-ல் இருக்கும் டிஸ்பிளே சிறியதாக இருக்கும். இந்த தயாரிப்பு lenovo.com, Flipkart, Croma மற்றும் Lenovo மூலம் நாடு முழுவதும் உள்ள பிரத்தியேக கடைகளில் கிடைக்கும்.

Google Assistant உடன் பயன்படுத்தக்கூடிய இரண்டு கூடுதல் சுற்றுச்சூழல் தயாரிப்புகளான ஸ்மார்ட் பல்ப் மற்றும் ஸ்மார்ட் கேமராவையும் லெனோவா அறிவித்தது. முந்தையதை, குரல் மூலம் அல்லது Google Assistant மற்றும் Amazon Alexa மூலம் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். மேலும், brightness, colour மற்றும் temperature-ஐ சரிசெய்ய அனுமதிக்கிறது. பிந்தையது,  home use மற்றும் monitoring-கிற்கான wide field-of-view camera, remote ஆகும், மேலும், மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கரில் இருக்கும் இருவழி தொடர்பு நன்றி செலுத்த அனுமதிக்கிறது. இந்த இரண்டு தயாரிப்புகளுக்கான விலை மற்றும் கிடைக்கும் தன்மை அறிவிக்கப்படவில்லை.

 
KEY SPECS
Model Smart Display 7
Touchpad Yes
Display included Yes
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Lenovo, Lenovo Smart Display 7, Lenovo Smart Bulb, Lenovo Smart Camera
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  2. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  3. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  4. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
  5. 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டத்துடன் மோட்டோ பேட் 70 குரூவ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
  6. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  7. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
  8. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுக தேதி கசிந்தது; முக்கிய அம்சங்களை டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்!
  9. பெரிய பேட்டரியுடன் விரைவில் ஷியோமி பேட் 9 அறிமுகமாகலாம்; கசிந்த முக்கிய அம்சங்கள்!
  10. சாம்சங் கேலக்ஸி A55, A35 மாடல்களில் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஒன் UI 9 சோதனை பதிப்புகள் கண்டறியப்பட்டன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.