சியோமி நிறுவனம் சார்பில் ரெட்மி ஏர்டாட்ஸ் என்னும் புதிய வயர்லெஸ் புளூடூத் இயர்பட்சை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் எம்ஐ ஏர்டாட்ஸ் என்ற பெயரில் இளைஞர்களுக்கான ப்ளூடுத் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் சீனாவில் ரெட்மி 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட் போன்களுடன் இந்த ரெட்மி ஏர்டாட்ஸ் தயாரிப்பும் அறிமுகமாகியுள்ளது.
இந்த புதிய ரெட்மி ஏர்டாட்ஸ் ப்ளுடூத் 5.0 கனெக்டிவிட்டி மற்றும் ரியல்லடெக் RTL8763BFR சிப் செட்டை கொண்டுள்ளது. சுமார் 4.1 கிராம் எடையுடைய இந்த ஏர்டாட்ஸ் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் போன்றவைகளுடன் பொருந்துகிறது.
மேலும் 40mAh பேட்டரி வசதி பெற்றுள்ளதாகவும் 4 மணி நேரம் வரை பேட்டரி பவரை தாங்கும் எனவும் சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இணைந்துள்ள சார்ஜிங் கேஸ் 300mAh பேட்டரி வசதியை பெற்றுள்ளது. இதன் மூலம் ஏர்டாட்சை சுமார் 12 மணி நேரம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த இயர்பட்சில் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ள 7.2mm டிரைவர்ஸ், வெளி சத்தங்கள் புகாதாவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 1,000 ரூபாய்க்கு இந்த ஏர்டாட்ஸ் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்கப்படுகிறது.
கறுப்பு நிறத்தில் மட்டுமே வெளியாகும் இந்த ஏர்டாட்ஸ் வரும் ஏப்ரல் 9 முதல் சீனாவில் விற்பனையைத் துவங்குகறிது. இந்தியாவில் இந்த ஏர்டாட்சின் அறிமுகம் பற்றி தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்