iPhone XS, iPhone XS Max, iPhone XR, வரிசையில் தற்போது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 வெளியாகி இருக்கிறது. ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்சுகள் கடந்த 2015-ல் இருந்துதான் வெளிவரத் தொடங்கின. அது முதற்கொண்டு வெளிவந்த ஸ்மார்ட் வாட்சுகளில் இந்த சீரிஸ்4 மிகச்சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
முந்தையதை விட 30 சதவீதம் பெரிய டிஸ்ப்ளே இதில் உள்ளது. தற்போது வரைக்கும் 38 மற்றும் 42 மி.மீ. அளவுள்ள வாட்சுகளையே ஆப்பிள் சந்தைப்படுத்தியது. ஆனால் இந்த சீரிஸ் 4-ல் 40 மற்றும் 44 மி.மீ. அளவுள்ள 2 மாடங்கள் வெளி வந்திருக்கின்றன.
சீரிஸ் 3-ல் எல்.டி.இ.-யை குறிப்பதற்கு சிகப்பு புள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு மாற்றாக சீரிஸ் 4-ல் சிவப்பு வளையம் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய மாடல் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பேண்டுகளை வாங்கிக் குவித்திருப்பது நீங்கள் என்றால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியை சொல்கிறோம். உங்களது 38 மி.மீ. பேண்ட் சீரிஸ் 4-ன் 40 மி.மீ. வாட்சுக்கும், 42 மி.மீ. பேண்ட் சீரிஸ் 4-ன் 44 மி.மீ. வாட்சுக்கும் கச்சிதமாக பொருந்தும்.
இ.சி.ஜி. என்னும் அதி நவீன வசதி உள்ளதாக ஆப்பிள் சீரிஸ் 4-வாட்சுகள் விளம்பரம் செய்யப்பட்டன. ஆனால் வாட்சை வாங்கும்போது இந்த வசதி கிடைக்காது. சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலமாகத்தான் இந்த சேவையை பெற முடியும். அமெரிக்காவில் இந்த நடைமுறை உள்ளதென்றால் மற்ற நாடுகளில் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன.
அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தபடியான என்ஹேன்ஸ்டு செல்லுலார் ரிசப்ஷன், செராமிக் கிரிஸ்டல் பேக், முந்தைய ஸ்மார்ட் வாட்சுகளை விட 2 மடங்கு வேகம் கொண்ட பிராசஸர், செகண்டு ஜெனரேஷன் ஆப்டிகல் ஹார்ட் சென்சார், ப்ளூடூத் 5.0, 16 ஜி.பி. ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்களுடன், தங்க வர்ணத்திலும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்