ஃபிட்னஸ் Band, என்பது உடற்பயிற்சி செய்வோர் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறது. பலர் தங்கள் செய்யும் உடற்பயிற்சியின் அளவை தெரிந்து கொள்ளவும், அன்றாடம் தாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதை கணக்கிடவும் ஃபிட்னஸ் Band-ஐ பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.
பல ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த Band-களை தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளன. முன்னரே லெனோவா மற்றும் சையோமி ஆகிய நிறுவனங்கள் தங்களது ஃபிட்னஸ் Band-களை வெளியிட்ட நிலையில். iVoomi நிறுவனம், FitMe என்கின்ற ஃபிட்னஸ் Band-ஐ வெளியிட்டு உள்ளது.
முன்னர் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் Band-கள் சந்தையில் போட்டா போட்டி கொண்டிருக்கும் நிலையில், iVoomi-யின் புதிய வரவு அதில் மாற்றம் உண்டாக்குமா؟ பார்த்து விடுவோம்…
டிசைன்
இந்த iVoomi நிறுவனத்தின் Band விலை 1,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று கையைச் சுற்றிக் கட்ட பயன்படும் ஸ்டராப். மற்றொன்று இந்த Band செயல்படத் தேவையான அனைத்து உணரிகளையும் கொண்டுள்ள உடல் அமைப்பு. இதில் ஒரு யு.எஸ்.பி போர்ட் சார்ஜிங்கிற்காக கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே டிவைஸின் பின்புறம் மிகப் பாதுகாப்பாக பொருத்தப்பட்டு உள்ளது. இந்த டிவைஸ், நீரினாலும் அதிர்வுகளாலும் பாதிக்கப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதய துடிப்பை அளக்கும் பட்டன் இருப்பதைப் பார்க்க முடியும். டிஸ்ப்ளே-வை ஆன் செய்யாத போது, நேரம், தேதி, பேட்டரி அளவு, ப்ளூடூத் ஸ்டேடஸ் போன்றவற்றை காட்டும். கையில் பொருத்தி ஆன் செய்துவிட்டால், டிஸ்ப்ளேவில் நடக்கும் அடிகள், எரிக்கப்பட்ட கலோரிகள், பயணப்பட்ட தூரம், தற்போதைய இதயத் துடிப்பு, காற்றுத் தன்மை அளவிட்டு குறியீடு இன்டெக்ஸ் மற்றும் வெப்பநிலை ஆகியவையைக் காட்டும்.
பெர்ஃபார்மன்ஸ்
நடக்கும் அல்லது ஓடும் அளவை FitMe, அளப்பதில் துல்லியம் இல்லை. இன்னொரு நிறுவனத்தின் Band-ஐ ஒரு கையில் கட்டிவிட்டு, FitMe Band-ஐ ஒரு கையில் கட்டி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தோம். ஆனால், FitMe Band, 0.9 கிலோ மீட்டர் மட்டுமே பயணப்பட்டு இருப்பதாக தெரிவித்தது. எனவே, இதில் இன்னும் துல்லியம் வேண்டும்.
காற்றின் தன்மையை அளவிடுவதற்கு எந்த உணரியும் இந்த சாதனத்தில் பொருத்தப்படவில்லை. மாறாக ஒரு ஆப் மூலம் தரவுகளைப் பெற்று சொல்கிறது. இதுவும் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை.
பேட்டரியும் வெகு நேரம் இருப்பதில்லை. பேட்டரியை முழு அளவில சார்ஜ் செய்துவிட்டு பயன்படுத்தினால், மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மட்டுமே வருகிறது. இது மார்கெட்டில் இருக்கும் அளவை விட மிகக் குறைவு. இந்த ஃபிட்னஸ் Band-ன் போட்டி நிறுவனங்களின் பேட்டரி, 20 நாட்கள் பக்கம் வருகிறது. ஆனால், வெறும் 4 நாட்கள் என்பது சரியான போட்டியைத் தருவதில்லை.
மேலும், ட்விட்டர், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற ஆப்களின் செயல்பாடுகளை இந்த FitMe Band மூலம் பின்பற்ற முடியும்.
வாங்கலாமா, கூடாதா؟
iVoomi நிறுவனத்தின் முதல் ஃபிட்னஸ் Band இது. இந்த சாதனம் அதன் போட்டி நிறுவனங்களின் சாதனங்களுக்கு எதிராக நிற்கும் அளவுக்குத் தகுதியைக் கொண்டிருக்கவில்லை. ஸ்ட்ராப் டிசைன் நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில், தூக்கத்தை அளவிடுவது, பயணப்படும் தூரத்தை அளவிடுவது போன்றவை துல்லியமாக இல்லை. காற்று மாசு அளவை மதிப்பிடுவதும் ஆப் மூலம் என்பதால், அதிலும் நேர்த்தி இல்லை.
பேட்டரி லைஃப் மிகக் குறைவு. இந்த ஃபிட்னஸ் Band-ஐ வாங்குவதற்கு முன்னர் சையோமி, அம்ப்ரேன் ஆகிய நிறுவனங்களின் ஃபிட்னஸ் Band-களை வாங்குவது சிறந்ததாக தெரிந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்