20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 மே 2020 11:16 IST
ஹைலைட்ஸ்
  • Amazfit T-Rex இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்
  • இது அமேசான் மூலம் விற்கப்படும்
  • இது MIL-STD-810G durability-ஐ வழங்குகிறது

அமாஸ்ஃபிட் டி-ரெக்ஸ் 5ATM நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது

Amazfit T-Rex ஜூன் இரண்டாவது வாரத்தில் இந்தியாவுக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 20 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று ஹுவாமி கூறியது. இராணுவ சான்றிதழ், AMOLED டிஸ்ப்ளே உள்ளது. Amazfit Bip S ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.


விலை:

Amazfit T-Rex மொத்தம் ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். சீனாவில் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,400) ஆகும். இருப்பினும், புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அதிக விலைக்கு அறிமுகப்படுத்தப்படலாம்.


விவரங்கள்:

Amazfit T-Rex, 1.3 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பிபிஜி இதய துடிப்பு சென்சார், மூன்று அச்சு முடுக்கமானி, புவி காந்த சென்சார் மற்றும் சுற்றுப்புற ஒளி சென்சார் உள்ளது. இணைப்பிற்காக, Amazfit T-Rex புளூடூத் வி 5.0-ஐப் பயன்படுத்துகிறது, மேலும் ஜிபிஎஸ் + க்ளோனாஸையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சில் 370 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. 

Amazfit T-Rex, ஒரே சார்ஜில் 20 நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. ஸ்மார்ட்வாட்ச் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். இதில் ஏடிஎம் நீர் எதிர்ப்பு உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்சின் எடை 58 கிராம் ஆகும்.

Amazfit T-Rex, 14 விளையாட்டு முறை கண்காணிப்பைக் கொண்டுள்ளது. 24 மணி நேர இதய துடிப்பு சென்சார் உள்ளது. ஸ்மார்ட்போனின் அனைத்து அறிவிப்புகளையும் இந்த ஸ்மார்ட்வாட்சில் காணலாம். 


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huami
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  2. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  3. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
  4. விவோ பேட் 6 ப்ரோ அறிமுகம்: 13.2-இன்ச் 4K டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்!
  5. விவோ X300 அல்ட்ரா மற்றும் X300s அறிமுகம்: 200MP கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் பல சிறப்பம்சங்கள்!
  6. Oppo Find X9 Ultra உலகளாவிய அறிமுக தேதி உறுதி; Find X9s Pro கேமரா விவரங்கள் வெளியீடு
  7. Vi 5G விரிவாக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் 90 நகரங்களுக்கு 5G சேவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு
  8. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  9. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
  10. விவோ X300s சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி: 200MP கேமரா மற்றும் 7,100mAh பேட்டரியுடன் வெளியாகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.