Photo Credit: Gadgets 360
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது google pixel watch 3 பற்றி தான்.
கூகுள் நிறுவனத்தின் google pixel watch 3 இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கூகுள் pixel watch 3 வசதிகளை பொறுத்தவரையில், இரண்டு அளவுகளில் கிடைக்கும். 41mm Wi-Fi version மற்றும் 45mm Wi-Fi version என இரண்டு அளவுகளில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட ப்ரைட்னஸ் வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் வெளிவந்துள்ளது. 2,000நிட்ஸ் உச்ச பிரகாசம் தருகிறது. இது கடந்த ஆண்டு மாடலை விட இரட்டிப்பாகும், மேலும் இருண்ட சூழலில் 1 நைட் வரை குறையும் என்று கூகுள் கூறுகிறது. இதன் பெசல்கள் முந்தைய மாடல்களை விட 16 சதவீதம் மெலிந்தவை. நூறு சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய google pixel watch 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் டபிள்யூ5 உடன் கார்டெல் எம்33 பிராசஸர் உடன் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
பிக்சல் வாட்ச் 3 மாடலில் பேட்டரி ஆயுள் மாறாமல் உள்ளது. எப்போதும் ஆன் டிஸ்பிளே இருந்தால் 24 மணிநேரம் பயன்படுத்தலாம். பேட்டரி சேவர் மூலம் 36 மணிநேரம் இயக்கலாம். இருந்தாலும் முந்தைய ஸ்மார்ட்வாட்சை விட 20 சதவீதம் வேகமாக சார்ஜிங் ஆகும். இது டென்சர் ஏ1 சிப் பொருத்தப்பட்ட நிறுவனத்தின் முதல் TWS ஹெட்செட் ஆகும். ஒலியின் வேகத்தை விட 90 மடங்கு வேகமாக செயல்படும். முந்தைய மாடல்களை விட ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷனில் (ANC) இரண்டு மடங்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. தொலைபேசி அழைப்புகளைச் செய்யும்போது சுற்றுப்புற ஒலிகளைக் குறைக்கும் தெளிவான அழைப்பு அம்சத்தை கூகுள் நிறுவனம் மேம்படுத்தி உள்ளது.
TWS ஹெட்செட் கூகிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வசதியை சப்போர்ட் செய்கிறது. எங்காவது மறந்து வைத்தாலும் எளிதாக கண்டுபிடிக்கலாம். பயனர்கள் அருகில் இருக்கும் போது இயர்பட்கள் மற்றும் சார்ஜிங் கேஸை ரிங் செய்ய அனுமதிக்கிறது. உடல்நல கண்காணிப்புகளைப் பொறுத்தவரை, Optical Heart Rate, SpO2 மானிட்டர், இசிஜி (ECG),ஸ்கின் டெம்பரேச்சர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன்வெளிவந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Fitbit Morning Brief இதில் அறிமுகப்படுத்துகிறது. இது நீங்கள் விழித்த பிறகு முக்கியமான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அளவீடுகளை வழங்கும். குறிப்பாக Wear OS 5 மூலம் இந்த வாட்ச் இயங்குகிறது. LTE சப்போர்ட் கொண்டுள்ள இந்த புதிய கூகுள் வாட்ச் புளூடூத் LE ஆடியோ சப்போர்ட் உடனும் வெளிவந்துள்ளது. இந்த வாட்ச் வாங்கினால் Google Fitbit Premium மெம்பர்ஷிப்ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்