Ola Electric Bike ஹெட்லைட்டே இவ்ளோ அழகா இருக்குதா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 ஆகஸ்ட் 2024 11:41 IST
ஹைலைட்ஸ்
  • ஓலா எலெக்ட்ரிக் பைக் ஆகஸ்ட் 15ல் அறிமுகமாகிறது
  • இது Inbuilt Battery இயங்கக்கூடியது
  • டூயல் பாட் எல்இடி ஹெட்லேம்ப் பொருத்தப்படலாம்

Photo Credit: X/Ola Electric

ங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Ola Electric Bike பற்றி தான்.  

இந்தியாவில் தற்போது முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையாளராக இருப்பது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தான்.ஓலா எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது ஓலா எலெக்ட்ரிக் பைக்கின் முன் பக்கத்தை வெளிக்காட்டக் கூடிய டீசர் படம் வெளியிடப்பட்டு உள்ளது.

10 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த டீசர் வீடியோவில் ஒரு பைக்கின ட்வின் பாடு முகப்பு விளக்குகள், ஹேண்டில் பார் மற்றும் டேங்க ஷ்ரௌடு ஆகியவை தெரிகிறது. Ola Electric பைக்கில் மிகவும் கவர்ச்சியான எல்இடி ஹெட்லைட் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கிறது. ட்வின் பாட் வகை எல்இடி ஹெட்லைட்டே ஓலா எலெக்ட்ரிக் பைக்கில் இடம் பெற இருக்கிறது. இந்த ஹெட்லைட் டிஆர்எல்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

 இப்போதைக்கு இந்த தகவல்கள் மட்டுமே Ola Electric பைக் பற்றிய வெளியாகி உள்ளது. விரைவில் இன்னும் சில முக்கிய விபரங்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, வருகின்ற ஆகஸ்டு 15 ஆம் தேதி Ola Electric  பைக் பற்றிய முக்கிய தகவலை ஓலா எலெக்ட்ரிக் வெளியிட இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஃபியூச்சர் பேக்டரியில் நடைபெறும் "சங்கல்ப் 2024" என பெயரிடப்பட்ட நிகழ்வில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இரு சக்கர மின்சார பைக் (EV) பவிஷ் அகர்வால் தலைமையிலான நிறுவனத்தின் முதல் பைக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Ola S1X, S1 Air, மற்றும்  S1 Pro ஆகியவற்றுடன் சேர்ந்து இந்திய சந்தையில் பெரிய அவதாரம் எடுக்க உள்ளது. இ ப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. 

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே இ-பைக்குகளுக்கும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஓலா நிறுவனம் அதன் இ-பைக்கை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தி இருந்தாலும், இந்த ஆண்டு விற்பனைக்கு வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஜூலை மாதம், ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மின்சார மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய தொடங்கும் என்று தெரிவித்தார். அதனை வைத்தே எல்லாம் யூகிக்கப்படுகிறது.

இது Tork Kratos R மற்றும் Revolt RV400 அல்லது Ultraviolette F77 Mach 2 மற்றும் Matter Aera போன்ற பைக்குகளுக்கு போட்டியாக அமையும். அறிமுகப்படுத்தப்படும் போது, ​​இந்திய சந்தையில் உள்ள மற்ற எலக்ட்ரிக் பைக்குகளை ஓரம்கட்டவும் செய்யலாம்.  சில டிசைன்கள்  கேடிஎம்-பாணியில் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான வலது பக்க டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.  

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.