வாட்ஸ்அப் சாட்டிங் அனுபவம் விரைவில் இன்ஸ்டாகிராம் போல மாறப்போகிறது, ஆனால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தத் தளம், பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணைப் பகிராமலேயே மற்றவர்களுடன் இணைந்துகொள்ள உதவும் புதிய 'யூசர்நேம்' (Username) அம்சத்தைக் கொண்டுவருகிறது.