அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பப் பெருநிறுவனமான என்விடியா, தனது ஜியோர்ஸ் நவ் (GeForce Now) சேவையை இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு காட்சிப்படுத்திய நிலையில், செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த கிளவுட் கேமிங் தளம் புதன்கிழமை காலை ஆரம்ப நிலை பீட்டா சோதனை கட்டத்திலிருந்து வெளியேறும்.
இந்த மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும், ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கும் மிகவும் பரபரப்பான மாதமாக இருந்தது. நினைவகத் தட்டுப்பாடு (memory shortage) போன்ற பிரச்சனைகளைத் தாண்டி, மோட்டோரோலா, சியோமி, சாம்சங் மற்றும் லாவா போன்ற பல நிறுவனங்கள் வெவ்வேறு விலை பிரிவுகளில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன.