இந்தியாவில் தனது குயிக் காமர்ஸ் வணிகத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக அமேசான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, 'அமேசான் நவ்' (Amazon Now) சேவை வரவிருக்கும் ஆண்டுகளில் நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவாக்கப்படும். அமேசான் இந்தியாவின் வரலாற்றிலேயே இந்த அதிவேக டெலிவரி சேவைதான் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிகப் பிரிவு என்று அமேசான் கூறுகிறது.