ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது எனத் தகவல்: இதுவரை தெரிந்தவை
ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகை முதன்முதலில் 2023-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்தில், மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பகிரும்போது அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அணுக முடியவி்ல்லை என்று பல்வேறு பயனர்கள் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிக்கப்படாத கட்டுப்பாடு குறித்த தகவல்களும் சில காலமாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக ஏர்டெல்லின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தின் பல ஸ்கிரீன்ஷாட்டுகளும் இணையத்தில் உலா வருகின்றன.