வோடபோனின் வாடிக்கையாளர்களுக்கான 56 நாட்கள் திட்டம்.. முழு விபரம் உள்ளே!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 11 பிப்ரவரி 2019 19:26 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.351 திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் நிறுவனம்!
  • 56 நாட்கள் வேலீடிட்டியுடன் இந்த திட்டம் வெளியாகுகிறது
  • இந்த திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

புதிய வாடிக்கையாளர்களுக்காக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வோடபோன் நிறுவனம் தனது ப்ரிபேய்டு வாடிக்கையாளர்களுக்காக மேலும் ஒரு புதிய வகை ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்ததியுள்ளது. முதல் ரீசார்ஜ் பேக், 351 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேக் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வெளியாகியுள்ளது.

மெசேஜ்க்ள் மற்றும் கால்கள் வசதி பெரும் இந்த பேக் மூலம் டேட்டா கிடைக்காது. மேலும் இந்தத் திட்டத்தை வோடபோன், தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த ஆஃபர் சரியாக எப்போது தொடங்கப்பட்டது என இன்னும் தெரியாமல் இருக்கும் நிலையில் சிலர் இது டிசெம்பர் 2018 முதல் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த அருமையான ப்ரிபேய்டு திட்டத்தில் டேட்டா இல்லாதது மட்டுமே குறையாக உள்ளது.

அதேபோல, ரூபாய் 176 ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஓன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பும் வசதியும் பெற்றுள்ளது. மேலும் இதுபோல ரூபாய் 496 மற்றும் 555 க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் நாள் ஓன்றுக்கு வரம்பற்ற கால்கள், 1.4 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்களை அனுப்ப முடிகிறது. இந்தத் திட்டம் 84 நாட்கள் மட்டும் 90 நாட்கள் பேக்கில் வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான 1,999 ரூபாய்கான திட்டத்தில் 1.5 ஜிபி (4ஜி/3ஜி) டேட்டா மற்றும் வரம்பற்ற கால்கள், 365 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone, Vodafone Prepaid, First REcharge Pack
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15 Apex வண்ண விருப்பம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 1 அன்று இந்தியாவில் அறிமுகம்
  2. ரியல்மி C100 5G: ஏப்ரல் அறிமுகம்!7000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் அதிரடி அம்சங்களுடன் கசிந்த விலை விவரங்கள்
  3. மெட்டா - ரே-பான் ஆப்டிக்ஸ் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  4. அமெரிக்காவில் உள்ள கூகுள் AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு ஜிமெயிலின் 'AI இன்லாக்ஸ்' அம்சம் அறிமுகம்
  5. பிக்சல்10 ப்ரோவை விட மெல்லிய பெசல்களைக்(Bezels) கூகுள் பிக்சல்11 ப்ரோ கொண்டிருக்கலாம்: கசிந்த ரெண்டர்கள் தகவல்
  6. ரெட்மி 15A 5G vs ரியல்மி P4 ​​லைட் 5G vs சாம்சங் கேலக்ஸி M17e 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்
  7. iOS 26.5 பீட்டா 1 வெளியீடு: ஆப்பிள் மேப்ஸ்-ல் விளம்பரங்கள் மற்றும் RCS மெசேஜ் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்
  8. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  9. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  10. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.