வோடபோன், புதிய தொகுக்கப்பட்ட ரீசார்ஜ் ப்ளான்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 129 மற்றும் ரூ. 269 ஆகும். அன்லிமிடெட் அழைப்பு மற்றும் டேட்டா சலுகைகளைத் தவிர, மூன்று புதிய வோடபோன் ரீசார்ஜ் திட்டங்கள் ரூ. 129, ரூ. 199 மற்றும் ரூ. 269, Vodafone Play மற்றும் Zee5 சந்தாக்களையும் வழங்குகிறது. கூடுதலாக, வோடபோன் புதிய ரூ. 24 ப்ரீபெய்ட் ப்ளான், இரவு 11 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை செல்லுபடியாகும் இந்த ப்ளான், 100 நிமிடங்கள் on-net அழைப்புகளை மட்டுமே வழங்கும், மற்ற உள்ளூர் / தேசிய அழைப்புகள் ஒரு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். சுவாரஸ்யமாக, சந்தாதாரர்களுக்கான இதேபோன்ற விலையுள்ள ப்ளான்களை ஐடியா இன்னும் பட்டியலிடவில்லை.
ரூ. 269 வோடபோன் ப்ரீபெய்ட் பேக் எந்த FUP மற்றும் 4GB டேட்டா இல்லாமல் அன்லிமிடெட் அழைப்பை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 600 SMS செய்திகளையும் அனுமதிக்கிறது. பிற ப்ளான்களில் Vodafone Play மற்றும் Zee5 அணுகல் ஆகியவை அடங்கும்.
புதிய வோடபோன் ரூ. 199 ப்ளானானது 21 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் அன்லிமிடெட் அழைப்பையும், 1 ஜிபி தினசரி டேட்டா கொடுப்பனவையும் ஒரு நாளைக்கு 100 SMS செய்திகளையும் வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு Vodafone Play மற்றும் Zee5 சந்தாவையும் வழங்குகிறது.
வோடபோனின் ரூ.129 ரீசார்ஜ் ப்ளான் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை 14 நாட்கள் செல்லுபடியுடன் வழங்குகிறது
வோடபோன் ரூ. 129 ப்ரீபெய்ட் ப்ளான் எந்த FUP இல்லாமல் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் அழைப்பு, 2 ஜிபி டேட்டா மற்றும் மொத்தம் 300 SMS செய்திகள் போன்ற பலன்களை வழங்குகிறது. இந்த ப்ளான் 14 நாட்கள் செல்லுபடியாகும். மேலும், Vodafone Play மற்றும் Zee5 சந்தாக்களையும் இலவசமாக தொகுக்கிறது.
புதிய ரூ. 24 வோடபோன் ப்ரீபெய்ட் ப்ளான் 100 நிமிட on-net நைட் அழைப்பு நிமிடங்களை மட்டுமே வழங்குகிறது மற்றும் 14 நாட்கள் செல்லுபடியாகும். on-net அழைப்பு நிமிடங்கள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படும். பிற உள்ளூர் / தேசிய அழைப்புகள் வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்