கடந்த திங்கட்கிழமையன்று வோடபோன் ஜடியா நிறுவனம், ஓவர் தி டாப் (OTT platform ) என்னும் இணையத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகளை வெளியிடும் (சன் என்.எக்ஸ்.டி) சன் தொலைக்காட்சி குழுமத்துடன் இணைய முடிவெடுத்துள்ளது.
50,000 மணிநேரம் வரை நிகழ்சிகளை ஒளிபரப்பு செய்துவரும் சன் என்.எக்ஸ்.டி ஆப் இனி வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிராந்திய மொழிகளான தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் சன் குழுமத்தின் நிகழ்ச்சிகளை வோடவோன் பிளே மற்றும் ஜடியா மூவிஸ் & டிவி ஆப்களில் பார்க்க முடியும்.
இந்த இணைப்பு மூலம் தென்இந்திய மொழிகளில் அதிகமாக நிகழ்ச்சிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் என்.எக்ஸ்.டி சேனல் பொருத்தவரை சுமார் 30 நேரலை சேனல்களும், 4000 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பல்வேறு பாடல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் சன் என்.எக்ஸ்.டி வீடியோ தளத்தில் இடம்பெற்றுள்ளது.
‘சன் குழுமத்துடன் இணைய பெறும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான மொழியில் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து அவர்களால் வோடபோன் மற்றும் ஜடியா ஆப்களில் பார்க்க முடியும். மேலும் தனது சொந்த மொழியில் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு விரும்புவார்கள். அதன் மூலம் எங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படும்' என வோடபோன் மற்றும் ஜடியா நிறுவனத்தின் தலைமை மார்கெட்டின் அதிகாரி சஷி சங்கர் தெரிவித்தார்.
கடந்த 2017-ல் அறிமுகம் செய்யப்பட்ட சன் என்.எக்ஸ்.டி, தென் இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. பிரபல திரைப்படங்களான 96, டிக்-டிக்-டிக், ராஜாகுமாரா, ஜெய் லவ குசா வாங்கியுள்ள நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான நாயகி, லட்சுமி ஸ்டோர்ஸ், கல்யாண வீடு மற்றும் கண்மணி போன்ற தொடர்களும் சன் என்.எக்ஸ்.டி ஆப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்