வோடபோன் ஐடியாவின் ரூ.95 ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அறிமுகம்! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
வோடபோன் ஐடியாவின் ரூ.95 ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அறிமுகம்! 

வோடபோனின் புதிய ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் இப்போது கிடைக்கிறது

ஹைலைட்ஸ்
 • வோடபோனின் ரூ.95 ஆல்ரவுண்டர் ரீசார்ஜ் சில வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது
 • இந்த ப்ளான் முன்பு 500MB டேட்டாவை வழங்க பயன்படுத்தப்பட்டது
 • வோடபோன் வேறு சில ஆல்ரவுண்டர் ப்ளானையும் வேறுபட்ட பலன்களுடன் வழங்குகிறது

வோடபோன் ஐடியாவின் புதிய ரூ.95 ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் மாற்றியமைக்கப்பட்ட சில திருத்தங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ப்ளான், அழைப்பு மற்றும் டேட்டா பலன்களை கொண்டுள்ளது. இந்த ப்ளான், நாடு முழுவதும் ஒரு சில வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே இப்போது கிடைக்கிறது. 


ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்கள்:


வோடபோன் ரூ.49 ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்

இந்த ரீசார்ஜ் ப்ளான், 28 நாட்கள் வேலிட்டியுடன் ரூ.38 டாக் டைம் மற்றும் 100MB டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ப்ளானிற்கான அழைப்பு கட்டணம் வினாடிக்கு 2.5 பைசா ஆகும்.


வோடபோன் ரூ.79 ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்

இந்த ரீசார்ஜ் ப்ளான், 28 நாட்கள் வேலிட்டியுடன் ரூ.64 டாக் டைம் மற்றும் 200MB டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ப்ளானிற்கான அழைப்பு கட்டணம் வினாடிக்கு 1 பைசா ஆகும்.


வோடபோன் ரூ.95 ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்

இந்த ரீசார்ஜ் ப்ளான், 56 நாட்கள் வேலிட்டியுடன் ரூ.74 டாக் டைம் மற்றும் 200MB டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ப்ளானிற்கான உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பு கட்டணம் வினாடிக்கு 2.5 பைசா ஆகும். இதற்கு முன்பு, வினாடிக்கு 1 பைசா என்ற மலிவான விலையில் இருந்தது குறிப்பிடத்தக்ககது. மேலும், இந்த ரீசார்ஜ் 500MB டேட்டாவுடன், 28 நாட்கள் வேலிட்டியை வழங்கியது.

Vodafone-ன் புதிய ரூ.95 ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மும்பை, தமிழ்நாடு, சென்னை, கர்நாடகா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற ஒரு சில தொலைத் தொடர்பு வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. Idea-வும் இதேபோன்ற ப்ளான்களை "டாப்அப் காம்போ" ரீசார்ஜ் பிரிவின் கீழ் வழங்குகிறது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. டிக்டாக்கிற்கு சவால் விடும் 'மித்ரன் ஆப்'! - 50 மில்லியன் பதிவிறக்கத்தை கடந்தது!!
 2. டிரிபிள் ரியர் கேமராக்களுடன் மோட்டோ ஜி புரோ அறிமுகம்!
 3. இரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்!
 4. குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி 6 எஸ் அறிமுகம்!
 5. 48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்!
 6. சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்!
 7. 4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!
 8. விவோ ஒய் 70 எஸ் அறிமுகம்! விலை மற்றும் விவரங்கள்!
 9. பிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது!
 10. சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com