வோடபோன் இன்னும், ரூ.299, ரூ.499, மற்றும் ரூ.699 ரீசார்ஜ் ப்ளான்களில் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்கிவருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் வோடபோன் ஐடியா பயனர்கள் முன்பு ரூ.399 மற்றும் ரூ.599 ப்ளான்களில் டபுள் டேட்டாவை பற்றது
மார்ச் முதல் வாரத்தில், வோடபோன் ஐடியா ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 ரீசார்ஜ்களில் டபுள் டேட்டா சலுகைகளை அறிவித்தது. ஆரம்பத்தில், நாட்டின் அனைத்து வட்டங்களிலும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகையை நிறுவனம் கொண்டு வந்தது. இந்த சலுகை கடந்த வாரம் 8 வட்டங்களில் மூடப்பட்டதால், தற்போது 14 வட்டங்களில் இயங்குகிறது. ஏப்ரல் மாதத்தில், நிறுவனம் வெறும் 9 வட்டங்களில் டபுள் டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியது. இந்த வசதி ரூ.399 மற்றும் ரூ.599 ரீசார்ஜ் ஆகியவற்றில் கிடைத்தது. இந்த முறை வோடபோன் ஐடியா இந்த இரண்டு ப்ளான்களிலும் கூடுதல் டேட்டா வழங்குவதை நிறுத்தியது.
இதன் விளைவாக, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை ரூ.399 மற்றும் ரூ.599 ஆகியவற்றின் ப்ரீபெய்ட் ப்ளான்களில் பயன்படுத்தப்படலாம். ரூ.399 ப்ளான் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும், ரூ.599 ப்ளான் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். முன்னதாக, வோடபோன் ஐடியா இந்த இரண்டு ப்ளான்களுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. ரூ.399 ப்ளானில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் டபுள் டேட்டா சலுகைகள் இன்னும் கிடைக்கின்றன.
இருப்பினும், நிறுவனம் ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 ப்ளான்களில் டபுள் டேட்டாவை வழங்கும். இந்த மூன்று ப்ளான்களுடன், நீங்கள் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். ரூ.299 ப்ளான் 28 நாட்கள் செல்லுபடியாகும், ரூ.449 ப்ளான் 56 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ரூ.699 ப்ளான் 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த மூன்று ப்ளான்களின் கீழ் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தாக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
இரண்டு ப்ளான்களும் அன்லிமிடெட் உள்ளூர், தேசிய மற்றும் ரோமிங் அழைப்புகளுடன் வருகின்றன. இலவச வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தாக்கள் கிடைக்கின்றன. மேலும், ஒரு நாளைக்கு 100 இலவச உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ் அடங்கும். நிறுவனம் தனது முதல் டபுள் டேட்டா சலுகையை மார்ச் முதல் வாரத்தில் கொண்டு வந்தது.
வோடபோன் புதிய ஆல்ரவுண்டர் ப்ரீபெய்ட் ரீசார்ஜையும் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டு வசதி ரூ.95 ரீசார்ஜில் கிடைக்கிறது. இந்த ப்ளானில் ரூ.74 பேச்சு நேரம் கிடைக்கும். நாடு முழுவதும் வெளிச்செல்லும் அழைப்புகளைச் செய்ய வினாடிக்கு 2.5 பைசா செலவாகும். இது 200MB டேட்டாவுடன் வருகிறது. ரூ.95 ப்ரீபெய்ட் ப்ளானின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இப்போதைக்கு, மும்பை, தமிழ்நாடு, சென்னை, கர்நாடகா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு இந்த ப்ளானின் சலுகை கிடைக்கும்.
Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts