Photo Credit: Reliance Jio
ரிலையன்ஸ் ஜியோ 21 நாடுகளுக்கான ISD எனப்படும் சர்வதேச சந்தாதாரர் டயலிங் ரீசார்ஜ் திட்டங்களை வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஒவ்வொரு ரீசார்ஜிலும் பிரத்யேக அழைப்பு நிமிடங்களை வழங்கும் வகையில் இந்த புதிய நிமிட பேக்குகளை அறிமுகப்படுத்தியது. புதிய ISD ரீசார்ஜ் திட்டங்கள் ரூ. 39 மற்றும் ரூ. 99 விலையில் தொடங்குகிறது. இந்த திட்டங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களுக்கு கிடைக்கும். புதிய பேக்குகள் தவிர, பல முக்கிய சர்வதேச இடங்களுக்கான பேக்-யூ-கோ பேக்குகளுக்கான கட்டணங்களையும் Jio நிறுவனம் திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் மற்றும் புதிய நிமிட பேக்குகள் இப்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கின்றன.
ஒரு செய்திக்குறிப்பில், Jio நிறுவனம் புதிய ISD நிமிட திட்டங்கள் குறித்து விவரித்துள்ளது. மினிட் பேக்குகள் சந்தாதாரர்களுக்கு எந்த கூடுதல் நன்மைகளும் இல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அழைப்பு நிமிடங்களை மட்டும் வழங்குகின்றன. இவை பணம் செலுத்தும் ரீசார்ஜ் திட்டங்களிலிருந்து வேறுபட்டவை. இங்கு பயனர்கள் ISD அழைப்புகளுக்கான சிறப்பு கட்டணத்தைப் பெற ஒரு பேக்கை முதலில் பெற வேண்டும். அதில் நிமிட அடிப்படையிலான கட்டுப்பாடுகள் இல்லை. இந்த திட்டங்கள் பொதுவாக சர்வதேச அளவில் குறுகிய அழைப்புகளை மட்டுமே மேற்கொள்பவர்களுக்கும், அதிக செலவு செய்ய விரும்பாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ரூ. 39 ரூபாய் விலையில் வந்துள்ள புதிய ரிலையன்ஸ் ஜியோ நிமிட பேக்குகள் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செய்யப்படும் சர்வதேச அழைப்புகளுக்கு கிடைக்கிறது. இது 30 நிமிட ஆன்-கால் நேரத்தை வழங்குகிறது. பங்களாதேஷ் உட்பட பிற நாடுகளுக்கு குறிப்பிட்ட நிமிட பேக்கின் விலை ரூ.49 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 20 நிமிட அழைப்புகளை வழங்குகிறது. சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் மலேசியாவில் அழைப்புகளைச் செய்ய, சந்தாதாரர்கள் ரூ. 15 நிமிட அழைப்பு நேரத்திற்கு 49 ரூபாய் ISD ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கான மினிட் பேக் விலை 15 நிமிட அழைப்பு நேரத்திற்கு 69 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அடுத்து, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அழைப்புகளைச் செய்ய, சந்தாதாரர்கள் ரூ. 79 ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இது 10 நிமிட அழைப்புகளை வழங்குகிறது. ரூ. 89 ரீசார்ஜ் பேக் சீனா, ஜப்பான் மற்றும் பூட்டானை உள்ளடக்கியது. இது 15 நிமிட அழைப்பு நேரத்தை வழங்குகிறது. இறுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, துருக்கி, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் அழைப்புகளைச் செய்ய, பயனர்கள் ரூ. 99 ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது 10 நிமிட ஆன்-கால் நேரத்தை வழங்குகிறது.
இந்த ரீசார்ஜ் திட்டங்கள், பயனர்கள் அவர்கள் இணைந்திருக்க விரும்பும் பிராந்தியத்திற்கு மட்டுமே பணம் செலுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஹைப்ரிட் திட்டங்கள் அனைத்து ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் மொபைல் சந்தாதாரர்களுக்கும் கிடைக்கும். மேலும், ஒரு பயனர் தங்கள் எண்ணை ஒரு திட்டத்துடன் எத்தனை முறை ரீசார்ஜ் செய்யலாம் என்பதற்கு வரம்பு இல்லை. அனைத்து பேக்குகளும் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்