இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், ரூ.48 மற்றும் ரூ.98-க்கு புதிய ப்ரீபெய்டு டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து ஏர்டெல் பயனர்களும் இந்த புதிய டேட்டா பேக் திட்டத்தைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், ரீசார்ஜ் செயலிகள் மற்றும் தளங்களில் இந்த பேக் வெளியாகியுள்ளது.
முன்னர் ஏர்டெல் நிறுவனம் 248 ரூபாய்க்கு ஒரு ப்ரீபெய்டு டேட்டா ப்ளானை அறிமுகம் செய்தது. இந்த ப்ளான் மூலம் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வசிதகள் கொடுக்கப்பட்டன. இந்த ப்ளானின் வெலிடிட்டி 28 நாட்களாகும்.
இந்த புதிய 48 ரூபாய் டேட்டா ப்ளான் மூலம், 3ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டாவை 28 நாட்களுக்குப் பெற முடியும். அதேபோல 98 ரூபாய் டேட்டா ப்ளான் மூலம், 6ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டாவை 28 நாட்களுக்குப் பெற முடியும். 98 ரூபாய் திட்டத்தில் மேலும், ஒரு நாளைக்கு 10 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியும் கொடுக்கப்படும்.
பல வாடிக்கையாளர்களுக்கு இணையதள வசதி தேவைப்படும். ஆனால், அவர்களுக்கு அதிக டேட்டா பயன்பாடு இருக்காது. அதைப்போன்ற பயனர்களை குறிவைத்துதான் இந்த புதிய ப்ரீபெய்டு டேட்டா ப்ளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்