ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு YouTube Premium முற்றிலும் இலவசமாக தருகிறது
Photo Credit: Jio
ஜியோ ஏர்ஃபைபர் செப்டம்பர் 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது JioFiber, Jio AirFiber பயனாளர்களுக்கான YouTube Premium பற்றி தான்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு YouTube Premium முற்றிலும் இலவசமாக தருகிறது. இந்த திட்டங்கள் வரம்பற்ற டேட்டா, இலவச குரல் அழைப்பு, OTT தளங்களுக்கான ஆப்ஷனை தருகிறது. ஜியோஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. பலன்களை அனுபவிக்க பயனர்கள் தங்கள் Google கணக்குகளை இணைக்க வேண்டும். YouTube பிரீமியம் பயனர்களுக்கு விளம்பரமில்லா வீடியோக்களை பார்க்கலாம். யூடியூப் மியூசிக்கிற்கான ஆஃப்லைன் சப்போர்ட், ஆஃப்லைனில் பார்ப்பதற்கான டவுன்லோட் ஆப்ஷன்களை பயனர்கள் பயன்படுத்த இது அனுமதிக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 24 மாத யூடியூப் பிரீமியத்தை கூடுதல் கட்டணமின்றி வழங்குவதாக X பதிவில் அறிவித்துள்ளது . ஏற்கனவே உள்ள மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர போஸ்ட்பெய்ட் திட்ட பயனர்களைத் தேர்ந்தெடுக்க இது கிடைக்கிறது. சந்தாதாரர்கள் ரூ. 888, ரூ. 1,199, ரூ. 1,499, ரூ. 2,499, மற்றும் ரூ. 3,499 திட்டங்கள் இந்தச் சலுகையைப் பெறலாம். இந்த JioFiber மற்றும் Jio AirFiber போஸ்ட்பெய்ட் திட்டங்கள் முறையே 30Mbps, 100Mbps, 300Mbps, 500Mbps மற்றும் 1Gbps வேகத்தை வழங்குகின்றன.
இந்த திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே வரம்பற்ற டேட்டா, இலவச குரல் அழைப்பு மற்றும் Netflix Basic, Amazon Prime Lite, Disney+ Hotstar, Sony Liv மற்றும் Zee5 ஆகியவற்றுக்கான ஆப்ஷன்களை வழங்குகின்றன.
இலவச YouTube பிரீமியம் அணுகலைப் பெற தகுதியான JioFiber மற்றும் Jio AirFiber போஸ்ட்பெய்ட் பயனர்கள் MyJio ஆப்பில் உள்நுழைய வேண்டும் அல்லது Jio.com வெப்சைட்டை பார்வையிடவும். அதில் தொடர்புடைய பேனரைக் கிளிக் செய்து தங்கள் Google கணக்கை இணைக்க வேண்டும். மேலும் இணைப்பு வெற்றியடைந்தவுடன், YouTube Premium சந்தா கூடுதல் கட்டணமின்றி செயல்படுத்தப்படும். இந்த சந்தா செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 24 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
யூடியூப் பிரீமியத்திற்கான தனிப்பட்ட மாதாந்திரத் திட்டம் இப்போது ரூ. 149 ஆக உள்ளது. மாணவர் மாதத் திட்டம் ரூ. 89 மற்றும் குடும்பத் திட்டம் ரூ. 299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் சந்தா விளம்பரமில்லா வீடியோ பார்வை அனுபவத்தை வழங்குகிறது. பயனர்கள் ஆஃப்லைனில் வீடியோ பார்க்க, அதனைபதிவிறக்க அனுமதிக்கிறது. இது தவிர சாதனங்களில் மற்ற பணிகள் செய்யும் போது பின்னணியில் வீடியோக்களை இயக்குவதற்கான வசதியும் வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch