1,999 ரூபாய்க்கு ஜியோஃபை ஹாட்ஸ்பாட் கிடைக்கிறது. இதற்கு 5 மாதங்கள் இலவச டேட்டாவும், ஜியோ டு ஜியோவுக்கு இலவச வாய்ஸ்கால்களும் வழங்கப்படுகிறது
Photo Credit: Jio
ஜியோஃபை வாங்கியவுடன் ஏற்கனவே அமலில் இருக்கும் பிளான்களைத் தேர்வு செய்ய வேண்டும்
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோவில் 5 மாதங்களுக்கு இலவச டேட்டா, வாய்ஸ்கால் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸின் ஜியோ நெட்வொர்க் ஆரம்பம் முதல் இன்று வரையில் பல்வேறு விதமான டேட்டா ஆஃபர்களையும், குறைந்த விலையிலான பிளான்களையும் அறிவித்து வருகிறது. இதற்கு ஈடுகொடுப்பதற்காக ஏர்டெல் போன்ற மற்ற நெட்வொர்க்குகளும் பிளான்களை மாற்றி வருகிறது. இருப்பினும் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது ஜியோவில் ஜியோஃபை (JioFi) வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் விதமாக சுதந்திர தின ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி 1,999 ரூபாய்க்கு ஜியோஃபை ஹாட்ஸ்பாட் கிடைக்கிறது. இதற்கு 5 மாதங்கள் இலவச டேட்டாவும், ஜியோ டு ஜியோவுக்கு இலவச வாய்ஸ்கால்களும் வழங்கப்படுகிறது.
ஆனால், வாடிக்கையாளர்கள் ஜியோஃபை வாங்கியவுடன் ஏற்கனவே அமலில் இருக்கும் பிளான்களைத் தேர்வு செய்ய வேண்டும். ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் வாங்கியவுடன், அதற்கான ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யப்படும். பின்பு, ஏற்கனவே உள்ள மூன்று பிளான்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இந்த பிளான் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஆக்டிவேட் செய்யப்படும். ஆக்டிவேட் ஸ்டேட்டஸை MyJio ஆப் மூமாக பார்த்துக் கொள்ளலாம். ஜியோவின் ஆன்லைன் தளத்திலும் ஜியோஃபை வாங்கலாம்.
ஜியோஃபை ஹாட்ஸ்பாட் பிளான்கள்:
அடிப்படை பிளான் 199 ரூபாய்க்கு ஆரம்பமாகிறது. இதில் 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. கூடுதலாக 99 ரூபாய் செலுத்தினால் ஜியோ பிரைம் சந்தாதாரராக மாறலாம். இவ்வாறு மாறுபவர்களுக்கு, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால் ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கின்றன. மேலும், 140 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
அடுத்ததாக 249 ரூபாய்க்கு இரண்டாவது பிளான் உள்ளது. இதில் தினமும் 2ஜிபி டேட்டா, வீதம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பிளானோடு 99 ரூபாய் செலுத்தி பிரைம் வாடிக்கையாளராக மாறுபவர்களுக்கு, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால் ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கின்றன.
மேலும், 112 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
மூன்றாவதாக இருக்கும் பிளானில் தான் அதிகபட்ச டேட்டா ஆஃபர் கிடைக்கிறது. அதன்படி, 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பிளானில் 99 ரூபாய் செலுத்தி பிரைம் வாடிக்கையாளராக மாறுபவர்களுக்கு, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ்கால் ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கின்றன, மேலும், 84 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்ஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்: company website.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999