அறிமுகமாகிறது 'ஜியோ ஜிகாபைபர்', ரிலையன்ஸின் ஆண்டு பொது சந்திப்பில் அம்பானி!

விளம்பரம்
Written by Abhinav Lal மேம்படுத்தப்பட்டது: 12 ஆகஸ்ட் 2019 14:25 IST
ஹைலைட்ஸ்
  • 15 மில்லியன் முன்பதிவுகளை 'ஜியொ ஜிகாபைபர் பெற்றுள்ளது
  • கடந்த ஆண்டு இந்த சேவை அறிவிக்கப்பட்டது
  • இந்த சேவை மாதத்திற்கு 700 ரூபாயிலிருந்து துவங்குகிறது

'ஜியோ ஜிகபைபர்' சேவையில் விலை மாதத்திற்கு 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை உள்ளது

Photo Credit: YouTube/ The Flame of Truth

ரிலையன்ஸ் நிறுவனங்களின் 42வது ஆண்டு போது சந்திப்பு (AGM 2019) ஆகஸ்ட் 12-ஆன இன்று நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி பேசுகையில், ஜீயோ இந்தியாவில் 340 மில்லியன் சந்தாதாரர்களை தாண்டி, உலகின் அதிவேகமான வளரும் டிஜிட்டல் சேவையாக மாறியுள்ளது என கூறியுள்ளார். ஜியோ பற்றி அவர் மேலும் பேசுகையில், இந்த தொலைதொடர்பு செப்டம்பர் 5-ல் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளது. ஜியோ ஒவ்வொரு மாதத்திற்கும் 10 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பெருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. 

இதற்கு அடுத்த அனைவராலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட 'ஜியோ ஜிகபைபர்' சேவை பற்றிய தகவல்களை அறிவித்துள்ளார் அம்பானி. ஜியோ ஜிகாபைபர் பற்றி அவர் பேசுகையில், இது வரை இந்த ப்ராட்பேண்ட் சேவை 15 மில்லியன் முன்பதிவுகளை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு இந்த சேவை 1,100 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த சேவை 1,600 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படவுள்ளது. இந்த 1,600 நகரங்களில் 20 மில்லியன் வீட்டு சேவைகளையும், 15 மில்லியன் தொழில் சேவைகளையும் எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாதத்திற்கு 700 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை சேவை விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும், ஒவ்வொரு தேவைக்கும், ஒவ்வொரு பிரிவிற்கும் பொருந்தும் வகையில்' அறிமுகமாகியுள்ளது என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது 100Mbps வேகத்தில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை, விரைவில் 1Gbps வேகம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிலையான சர்வதேச தொலைப்பேசி அழைப்பைப் பொறுத்தவரை, அம்பானி "சர்வதேச அழைப்பிற்கான மிகக் குறைந்த நிலையான வரி விகிதங்களை" அறிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான அழைப்புகளுக்கான வரம்பற்ற சர்வதேச அழைப்புப் பொதியும் ரூ. 500.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Jio GigaFiber, Jio Fiber, Reliance AGM, RIL, Reliance Jio, Jio Broadband, Jio Welcome Offer
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Fab Grab Fest 2025: Galaxy S25, Galaxy Z Fold7 முதல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை - அதிரடி சலுகை
  2. Amazon-ல் Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! iPad, Samsung, OnePlus டேப்லெட்டுகளுக்கு அதிரடி சலுகைகள்
  3. Amazon Great Indian Festival 2025: Samsung, Xiaomi, LG ஸ்மார்ட் டிவி-களுக்கு அதிரடி விலைக் குறைப்பு
  4. Amazon vs Flipkart: Samsung Galaxy S24 Ultra மற்றும் iPhone 16 Pro-வுக்கு மிகப்பெரிய விலைக் குறைப்பு! எது வாங்கலாம்?
  5. Vivo X300 series போன் வெளியீட்டு தேதி உறுதியாகிடுச்சு! ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. Samsung ஃபோன் வாங்கலாமா? Amazon Great Indian Festival Sale 2025-ல Galaxy S24 Ultra, Z Fold 6 உட்பட பல போன்களுக்கு செம Discounts
  7. OnePlus ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க!
  8. Redmi மற்றும் Xiaomi ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க
  9. வீட்டையே தியேட்டரா மாத்தணுமா? Amazon Sale-ல Lumio Vision-ன் Smart TVs மற்றும் Projectors-க்கு செம Discounts இருக்கு!
  10. Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! Amazon Great Indian Festival Sale 2025-ல் Apple முதல் Samsung வரைSpecial Discounts
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.