4 நாள் வேலிடிட்டியுடன் 2ஜிபி டேட்டா இலவசம்! அதிரடி ஆஃபர் வழங்கிய ஜியோ!

உங்களுக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா கிடைத்ததா? இல்லையா? இதற்காக, உங்கள் போனில் உள்ள MyJio app-ல் உள்ள My Plans பகுதிக்கு செல்ல வேண்டும்.

4 நாள் வேலிடிட்டியுடன் 2ஜிபி டேட்டா இலவசம்! அதிரடி ஆஃபர் வழங்கிய ஜியோ!

புதிய ஆஃபர், ஜியோ டேட்டா பேக்கின் ஒரு பகுதியாகும்.

ஹைலைட்ஸ்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு டேட்டா பலனை ஜியோ வெளியிடுகிறது
  • இந்த ஆஃபர் மே 2 வரை பொருந்தும்
  • ஜியோ டேட்டா பேக் கூடுதல் டேட்டா பலன்களை பட்டியலிடுகிறது
விளம்பரம்

ரிலையன்ஸ் Jio தனது சந்தாதாரர்களுக்கு 2 ஜிபி கூடுதல் டேட்டாவை ஒவ்வொரு நாளும் வழங்குகிறது. இந்த வசதி நான்கு நாட்களுக்கு மட்டுமே. புதிய ஆஃபர், ஜியோ டேட்டா பேக்கின் ஒரு பகுதியாகும். மேலும் பயனர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வருகையைப் பொறுத்து மே 2 வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு சில நாட்களுக்கு கூடுதல் டேட்டாவை வழங்குவது இது முதல் முறை அல்ல. இத்தகைய ஆஃபர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உள்ள பல ஜியோ சந்தாதாரர்கள் தங்களது ஜியோ இணைப்புடன் பயன்படுத்த கூடுதல் 2 ஜிபி 4 ஜி டேட்டாவை பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர். கூடுதல் டேட்டா நான்கு நாட்களுக்கு கிடைக்கிறது மற்றும் இது ஜியோ டேட்டா பேக்கின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை முதலில் டெலிகாம் டாக் வழங்கியது.

ஒவ்வொரு நாளும் கிடைக்கும் இந்த கூடுதல் 2 ஜிபி டேட்டா தற்போதுள்ள டேட்டா தொகுப்பின் மேல் காணப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இதன் பொருள் உங்கள் ஜியோ எண்ணில் எந்தத் திட்டம் செயலில் இருந்தாலும், அதில் கூடுதல் டேட்டா வழங்கப்படும்.

சில பயனர்களுக்கு, இந்த ஆஃபர் உங்களுக்கு எப்போது கிடைத்தது என்பதைப் பொறுத்து, மே 2-க்குள்ளும் மற்றும் சில பயனர்களுக்கு ஏப்ரல் 30 அல்லது மே 1-க்குள்ளும் கூடுதல் டேட்டா கிடைக்கும். 


இந்த ஆஃபரை எப்படி சரிபார்ப்பது? 

உங்களுக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா கிடைத்ததா? இல்லையா? இதற்காக, உங்கள் போனில் உள்ள MyJio app-ல் உள்ள My Plans பகுதிக்கு செல்ல வேண்டும். கூடுதல் டேட்டா, நேரடி டேட்டா பேக்குக்குள் இருக்கும். இது ஏற்கனவே உள்ள ப்ளானுடன் பட்டியலிடப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கான கூடுதல் டேட்டாவை ஜியோ உருவாக்கியுள்ளது. இந்த பயனர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. Vivo ரசிகர்களே! X300 சீரிஸ் இந்தியாவில் வருது! Zeiss கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் டிசம்பரில் லான்ச்
  2. அடேங்கப்பா! Redmi K90 Pro Max-ல Bose ஆடியோவா? சும்மா தெறிக்குமே! | விலை & ஸ்பெக்ஸ்
  3. 108MP கேமரா, 7500mAh பேட்டரி: பட்ஜெட்ல ஒரு மாஸ் போன்! - Honor Magic 8 Lite லீக்ஸ்
  4. 2.07" AMOLED ஸ்கிரீன், 24 நாள் பேட்டரியா? - Redmi Watch 6 போட்டிருக்கும் மாஸ் பிளான்
  5. ஃபோன் ஸ்டோரேஜ் ஃபுல்லா இருக்கா? இனிமேல் WhatsApp-ல் இருந்தே ஈஸியா க்ளீன் பண்ணலாம்!
  6. WhatsApp Group-களில் இப்போ @all யூஸ் பண்ணலாம்! முக்கியமான அறிவிப்புகள் இனி எல்லாருக்கும் உடனே போகும்!
  7. JioSaavn-ல் விளம்பரம் இல்லாம பாட்டு கேட்க ஆசையா? ரூ.399-க்கே 1 வருடம் சப்ஸ்கிரிப்ஷன்
  8. iQOO 15-ன் பர்ஃபார்மன்ஸை இனி இந்தியாவிலும் பார்க்கலாம்! Snapdragon 8 Elite Gen 5, OriginOS 6 உடன் நவம்பரில் வருகிறது!
  9. OnePlus-ன் கேமிங் ராட்சசன்! Ace 6-ல் இதுதான் டாப்: Snapdragon 8 Elite, 165Hz ஸ்கிரீன், ரெக்கார்டு பிரேக் பேட்டரி
  10. மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »