Photo Credit: Twitter/ Jane Manchun Wong
சுமார் ஒரு பில்லியனுக்கும் மேலான பயனாளிகளை கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், கடந்த 2018 மே மாதம் நடந்த F8 டெவலப்பர்கள் மாநாட்டில் தங்களது செயலியில் புதிய ஒரு மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அறிவித்தனர். அதன் படி தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை ‘டார்க் மோட்' ஆக மாற்ற முடிவெடுத்துள்ளனர்.
இதுவரை சொந்த சோதனைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும், சோதனையில் இதுவரை அமெரிக்கா சேர்க்கப்படவில்லை என்னும் தகவல் வெளியானது. இந்த புதிய தோற்ற அமைப்பை இன்னும் முழுமையாக சரிசெய்யதால் மற்ற நாடுகளுக்கான சோதனைக்கு திறக்கவில்லை என அப்டேட் வந்துள்ளது.
மேலும் இந்த டார்க் அல்லது கருப்பு நிற பேக்கிரவுண்டு நிறம் வசதியை சோதனை செய்யப்படும் நாட்டில் இருப்பவர்களுக்கு செயல்படும் ஸ்கிரீன்ஷாட்டை அடிப்படையாகக் வைத்து செயலியில் உள்ள ‘மீ' பிரிவில் இதற்கான அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பேஃஸ்புக் மெசஞ்சிற்கான கருப்பு நிற பேக்கிரவுண்டு, பலரால் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் எளிமையான UI (யூஐ) எனப்படும் செயலீ மூலம் புதிய வகை மெசஞ்சரை வெளியிடப் போவதாக, ஏப்ரல் 2018ல் நடந்த F8 மாநாட்டில் அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
இந்த முறையை பயன்படுத்துவது மூலம் அண்ட்ராய்டு போன்களில் குறைவான சக்தியைப் பயன்படுத்துவதாகவும், பேட்டரி ஆயுள் சேமிக்கப்படுவதாகவும் குகூள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
டார்க் மோடை பயன்படுத்துவதன் மூலம் முழு செயலியும் கருப்பு நிறத்திற்க்கு மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்