இரண்டு BSNL பிராட்பேண்ட் ப்ளான்களும் இந்தியா முழுவதும் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி) அன்லிமிடெட் குரல் அழைப்பு பலனை வழங்குகின்றன.
BSNL ரூ. 491 ப்ளான் 20Mbps இணைய வேகத்துடன் 120GB டேட்டா பதிவிறக்கத்தை வழங்குகிறது
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இரண்டு புதிய பிராட்பேண்ட் ப்ளான்களை ரூ. 299 மற்றும் ரூ. 491 மற்றும் இரண்டு ப்ளான்களும் 20Mbps டேட்டா வேகத்தை வழங்குகின்றன. இந்த மாத திட்டங்கள் விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது அடுத்த ஆண்டு மார்ச் 25 வரை வழங்கப்படும். அதிக இணைய வேகத்தை வழங்குவதைத் தவிர, இரண்டு BSNL பிராட்பேண்ட் ப்ளான்களும் முறையே 50 ஜிபி மற்றும் 120 ஜிபி டேட்டா அதிவேக டேட்டா பதிவிறக்கத்தை வழங்குகின்றன. புதிய பிராட்பேண்ட் ப்ளான்கள் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி) அன்லிமிடெட் குரல் அழைப்புகளை BSNL லேண்ட்லைன் சேவை வழியாக கூடுதல் பலன்களாக வழங்குகின்றன. இந்த இரண்டு ப்ளான்களும் புதிய பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கும், பிராட்பேண்ட் சேவைகளைச் சேர்க்க விரும்பும் BSNL லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே கிடைக்கின்றன.
ரூ. 299 BSNL பிராட்பேண்ட் ப்ளான் அல்லது 50GB_CUL ப்ளானுடன் தொடங்கும் போது, இது 20Mbps வரை இணைய வேகத்துடன் 50 ஜிபி இலவச டேட்டாவை வழங்கும். டேட்டா உச்சவரம்பை அடைந்த பிறகு, வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். குறிப்பிட்டுள்ளபடி, இந்த ப்ளான், இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி) அன்லிமிடெட் அழைப்பை இலவசமாக வழங்கும். ISD விலைகள், யூனிட்டுக்கு ரூ. 1.2 ஆகும். BSNL பயனர்களுக்கு புதிய பிராட்பேண்ட் இணைப்பிற்கான பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ. 500 ரூபாய் வசூலிக்கப்ப்டும். இந்த விளம்பர ரூ. 299 பிராட்பேண்ட் ப்ளான் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு பயனர்கள் 2 ஜிபி CUL ப்ளானுக்கு மாற்றப்படுவார்கள். இதன் விலை மாதத்திற்கு ரூ. 399 ஆகும். 2GB CUL ப்ளான் 8Mbps வேகத்தில் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது.
ரூ. 120GB_CUL ப்ளான் என்றும் அழைக்கப்படும் ரூ. 491 BSNL பிராட்பேண்ட் ப்ளான் 20Mbps இணைய வேகத்தை வழங்குகிறது. ஆனால் இதன் டேட்டா 120 ஜிபி வரை செல்லும். டேட்டா வரம்பை அடைந்த பிறகு, வேகம் 1Mbps ஆக குறைக்கப்படுகிறது. ரூ. 299 ப்ளானைப் போன்று, இது அன்லிமிடெட் குரல் அழைப்பு சலுகைகளையும் வழங்குகிறது. மேலும் பயனர்கள் 3 ஜிபி CUL ப்ளான்களுக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகு ரூ. 499-யாக விலையிடப்படும். 3GB CUL ப்ளான் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை 8Mbps வேகத்தில் வழங்குகிறது. BSNL இணையதளத்தில் இரண்டு ப்ளான்களையும் நாம் காணலாம், ஆனால் அவை முதலில் Telecom Talk-ல் அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டு ப்ளான்களும் மாதாந்திர அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும்போது, ஆண்டுக்கு அரையாண்டு கட்டணம் செலுத்தும் ஆப்ஷனை மட்டுமே BSNL ஏற்றுக்கொள்கிறது என்று அறிக்கை கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak