இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் ரிலையன்சின் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுடன் போட்டி போட அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. 171ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் நாளுக்கு 2ஜிபி 3ஜி டேட்டா & 100 எஸ்எம்எஸ், இந்தியா முழுக்க அளவற்ற இலவசக் கால்கள் கிடைக்கும். இப்புதிய பேக்கின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதன்படி ஒரு ஜிபி டேட்டா 2 ரூபாய் 85 பைசாவுக்குக் கிடைக்கிறது. இதே சேவையை 198 ரூபாயில் ஜியோ வழங்குகிறது. மேலும் ஜியோவை விட பிஎஸ்என்எல்-இல் வேலிடிட்டி கூடுதல்.
தில்லி, மும்பை டெலிகாம் வட்டங்களிலும் இப்பேக்கின் ரோமிங் கால்கள் சலுகை செல்லுபடியாகும். இவ்விரு வட்டங்களிலும் பிஎஸ்என்எல்லுக்கு பதில் எம்டிஎன்எல் இயங்குவதால் வழக்கமாக இத்தகைய சலுகை கிடைக்காமல் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது. இப்புதிய பேக்கில் அளிக்கப்படும் இலவசக் கால்களுக்கு எவ்வித தினசரி, வாரந்திர எல்லைகளும் கிடையாது.
முன்பே கூறியிருந்படி இதே சேவையை ஜியோ 198 ரூபாய்க்கு அளிக்கிறது. ஏர்டெல் 199 ரூபாய்க்கு அளிக்கிறது. எனினும் வேலிடிட்டி 28 நாட்கள். பிஎஸ்என்எல்லில் 30 நாட்கள் வேலிடிட்டி. இதனிடையே வோடபோன் ஒரு நாளுக்கு 2.8 ஜிபி 4ஜி டேட்டாவுடன் அளிக்கும் வகையில் அண்மையில் தனது 199ரூபாய் பேக்கை மாற்றி அமைத்துள்ளது. ஆனால் இதில் இலவச எஸ்எம்எஸ் சலுகை இல்லை.
இவைபோக கடந்த மாதம் தனது சென்னை, தமிழ்நாடு வட்டங்களில் 19ரூபாய்க்கான சிறப்பு டாரிப் வவுச்சர்களை (STV) பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆன்-நெட் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 15பைசாவும் ஆப்-நெட் அழைப்புகளுக்கு 35பைசாவும் ஆகும். இதன் வேலிடிட்டி 54 நாட்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்