பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் 399 ரூபாய்க்கு புதிதாக ஒரு பிளான் அறிமுகம் செய்யப்பட்டு, ஏற்கனவே உள்ள இரு பிளான்கள் ரத்து செய்யப்படுகின்றன. இவை குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் தறப்போது புதிதாக 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதன் வேலிடிட்டடி 80 நாட்கள் ஆகும். இந்த 80 நாட்களும் தினமும் 1ஜிபி டேட்டா, 250 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் வாய்ஸ்கால் வழங்கப்படுகின்றன. தினசரி டேட்டா 1ஜிபி முடிந்ததும், டேட்டாவின் வேகம் 80kbps ஆகக் குறைக்கப்படும். இந்த புதிய திட்டம் நாளை (ஆகஸ்ட் 15) ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும், இதே போல் 399 ரூபாய்க்கு உள்ள மற்றொரு ரீசார்ஜ் பிளானனும், 1699 ரூபாய்க்கான பிளானும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (ஆகஸ்ட் 14) முதல் இந்த இரண்டு பிளான்களும் நிறுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாகவே ஆகஸ்ட் 15 முதல் புதிய 399 ரூபாய் பிளான் அமலுக்கு வருகிறது.
புதிய 399 ரூபாய் பேக்கில், தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச பிஎஸ்என்எல் டியூன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் சி-டாப்அப், செல்ஃப்கேர், வெப்போர்ட்டல் ஆகியவற்றின் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
புதிய பிளான்கள் பற்றிய முழுமையான விவரங்கள் தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று பார்க்கலாம்.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்