பிஎஸ்என்எல் 'Work@Home' பிராட்பேண்ட் ப்ளான் காலக்கெடு நீட்டிப்பு!

பிஎஸ்என்எல் 'Work@Home' பிராட்பேண்ட் ப்ளான் காலக்கெடு நீட்டிப்பு!

பிஎஸ்என்எல் தனது "Work@Home" விளம்பர பிராட்பேண்ட் ப்ளான் நீட்டிப்பை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது

ஹைலைட்ஸ்
  • பிஎஸ்என்எல்லின் "Work@Home" ப்ளான் ஏப்ரல் 19 வரை நீட்டிக்கப்பட்டுள
  • இந்த ப்ளான் தினசரி 5 ஜிபி அதிவேக டேட்டா அணுகலை வழங்குகிறது
  • கொரோனா வைரஸ் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
விளம்பரம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), "Work@Home" விளம்பர பிராட்பேண்ட் ப்ளானின் வேலிடிட்டியை தற்போது மே 19 வரை நீட்டித்துள்ளது. பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய இணைப்பை வழங்குவதற்காக, இந்த ப்ளான் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த ப்ளானில், பி.எஸ்.என்.எல்-ன் அனைத்து லேண்ட்லைன் சந்தாதாரர்களுக்கும் ஒரு நாளைக்கு அதிவேக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் அவர்கள் 10 எம்.பி.பி.எஸ் பதிவிறக்க வேகத்தைப் பெறுகிறார்கள். 

இந்த ப்ளானின் கீழ், கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது, மக்களை தங்கள் வீடுகளில் அடைத்து வைப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், பிஎஸ்என்எல்லின் இந்த விளம்பரத் ப்ளான் ஏப்ரல் 19 வரை மட்டுமே இருந்தது. ஆனால் ஊரடங்கு காலக்கெடு அதிகரிப்பதால் இது வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்ட்டுள்ளது.

பிஎஸ்என்எல் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் Work@Home விளம்பர பிராட்பேண்ட் ப்ளானின் வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மே 19 வரை ப்ளானின் கிடைக்கும் தன்மையைக் காட்டும் ஒரு படத்தை கணக்கு வெளியிட்டது.


கிடைக்கும் வட்டங்கள்:

BSNL தனது பிராட்பேண்ட் ப்ளானை லேண்ட்லைன் சந்தாதாரர்களுக்காக ஏப்ரல் 19 வரை வேலிடிட்டியுடன் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தின் போது, ​​இந்த ப்ளான் அந்தமான்-நிக்கோபார் வட்டம் உட்பட அனைத்து வட்டங்களிலும் கிடைத்தது. முதல் ஊரடங்கு ஏப்ரல் 14 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டது. ஆனால் அரசு அதை மே 3 வரை நீட்டித்துள்ளது.

அதாவது, மே 3 வரை மக்கள் தங்கள் வீடுகளில் தங்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு பி.எஸ்.என்.எல் தனது ப்ளானையும் அதிகரித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்திய அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கு, மக்களை தங்கள் வீடுகளில் அடைத்து வைப்பது, கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆகும்.

 
பிஎஸ்என்எல் Work@Home பிராட்பேண்ட் ப்ளான் பலன்கள்:


Work@Home பிராட்பேண்ட் ப்ளானில் இருந்து, பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 10 எம்.பி.பி.எஸ் வேகத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், 5 ஜிபிக்கு மேல் டேட்டாவை பயன்படுத்திய பிறகு, இந்த வேகம் 1 எம்.பி.பி.எஸ் ஆக குறைகிறது. 

இந்த ப்ளானில், வாடிக்கையாளர்கள் 1 ஜிபி வரை ஸ்டோரேஜை இலவச மின்னஞ்சல் ஐடியுடன் பெறுவார்கள். இது தவிர, இந்த ப்ளானிற்கு கூடுதல் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. அழைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லேண்ட்லைன் ப்ளானின் படி அழைப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்கள் இந்த புதிய பிராட்பேண்ட் ப்ளான 1800-345-1504 என்ற டோல்-ஃப்ரீ எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பெறலாம்.


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »