ரூ.247 மற்றும் ரூ.1,999 ரீசார்ஜ் பிளான்களின் வேலிடிட்டி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ரூ.78, ரூ.551, ரூ.249 மற்றும் ரூ.447 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்கள் திரும்பப் பெறப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.147, ரூ.247 மற்றும் ரூ.1,999 திட்டங்களில் சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன.
ஜியோ, ஏர்டெல் ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் பல விதமான ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 147 ரூபாய்க்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 30 நாட்களுக்கு 10ஜிபி டேட்டா, அன்லிமிடேட் லோக்கல் கால், 250 நிமிடங்கள் எஸ்டிடி கால் பெற முடியும். இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதனை ஆக்டிவேட் செய்ய, வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனில் இருந்து STV COMBO147 என டைப் செய்து 123 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் போதும். மேலும், பிஎஸ்என்எல் இணையதளம், ரீசார்ஜ் கடைகள் மூலமாகவும் இந்த ஆஃபரைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதே போல், ரூ.247 மற்றும் ரூ.1,999 ரீசார்ஜ் பிளான்களின் வேலிடிட்டி, நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 247 ரூபாய் ரீசார்ஜின் வேலிடிட்டி 36 நாட்களும், 1,999 ரூபாய் வேலிடிட்டி 439 நாட்கள் வரையிலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்தச் சலுகை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் மட்டும் வழங்கப்படுகிறது.
இதனிடையே ரூ.78, ரூ.551, ரூ.249 மற்றும் ரூ.447 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. மேலும், ரூ.144, ரூ.792, ரூ.1,584 பதஞ்சலி ப்ரீபெய்டு திட்டங்களும் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999