ஏர்டெலில் 129 மற்றும் 199 ரூபாய்க்கான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்! என்ன சலுகைகள்?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 18 ஆகஸ்ட் 2020 14:01 IST
ஹைலைட்ஸ்
  • 1ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால்
  • ஹலோ டியூன்களும் கிடைக்கின்றன.
  • முன்னதாக இந்த பிளான்கள் 23 வட்டங்களில் மட்டுமே கொண்டு வரப்பட்டது

ரூ.129, ரூ.199 இரண்டு ரீசார்ஜ் பிளான் வேலிடிட்டியும் 24 நாட்கள் ஆகும்

ஏர்டெல் நெட்வொர்க் தனது 129 மற்றும் 199 ரூபாய்க்கான ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை தமிழகம் வரையில் விரிவுபடுத்தியுள்ளது. 

ஏர்டெலில் கடந்த கடந்த மே மாதம் இரண்டு ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் குறிப்பிட்ட சில வட்டங்களில் மட்டுமே கொண்டு வரப்பட்ட இந்த பிளான், பின்பு படிப்படியாக மற்ற வட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. அந்த வகையில், தற்போது ஆந்திரா, தெலங்கானா, சென்னை, ஹிமாச்சல் பிரதேசம், காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட வட்டங்களிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. .

அதன்படி, 129 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடேட் லோக்கல் கால், எஸ்டிடி கால், ரோமிங் கால் கிடைக்கின்றன. மேலும், 300 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகின்றன. இந்த பிளானின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். 

199 ரூபாய்க்கு ரீசார்ஜ் பிளானும் அதே போல் தான் உள்ளது. அதாவது, 199 ரீசார்ஜ் செய்தால், 1ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன. இதன் வேலிடிட்டியும் 24 நாட்கள் ஆகும்.

ரூ.129, ரூ.199 இரண்டு ரீசார்ஜ் பிளானிலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்கின்றன. மேலும், ஹலோ டியூன்களும் கிடைக்கின்றன.

முன்னதாக இந்த பிளான்கள் 23 வட்டங்களில் மட்டுமே கொண்டு வரப்பட்டது. பின்னர், கடந்த ஜூலை மாதம் கூடுதலாக 16 வட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் பெரும்பாண்மையான வட்டங்களில் இந்த ரீசார்ஜ் பிளான் அறிமுகமாகியுள்ளது.

Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.