Ladakh-ல் Airtel முன்னெடுக்கும் அசத்தல் திட்டம்!!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 ஜனவரி 2020 15:38 IST
ஹைலைட்ஸ்
  • ஏர்டெல், லடாக்கில் 26 கிராமங்களில் 4G & 2G சேவைகளை அறிமுகப்படுத்தியது
  • இந்த கிராமங்கள் பிராந்தியத்தில் இருந்து 150 கி.மீ பரவியுள்ளது
  • 4G சேவைகளை முதன்முதலில் லேவில் 2017 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது

4G சேவைகள் உள்ளூர்வாசிகளுக்கு அதிவேக இணையத்தை உலாவ உதவும்

Photo Credit: Twitter/ TRAI

தொலைதொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் வியாழக்கிழமையன்று லடாக்கில் 26 கிராமங்களில் தனது 4G மற்றும் 2G சேவைகளை அறிமுகப்படுத்தியது. இந்த உயரமான பகுதிகளுக்கு அதிவேக மொபைல் பிராட்பேண்ட் வழங்கும் முதல் ஆபரேட்டர் ஆனது. இந்த கிராமங்கள் கார்கில்-படாலிக்-ஹனுதாங்-ஸ்கர்பூச்சன்-கல்சியில் (Kargil-Batalik-Hanuthang-Skurbuchan-Khalsi) இருந்து 150 கி.மீ பரவியுள்ளது. 

"இது லடாக் மக்களுக்கு ஏர்டெல் வழங்கும் புத்தாண்டு பரிசாகும். எங்கள் 4G & 2G சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் லடாக்கில் உள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு உற்சாகத்தை அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், 26 புதிய கிராமங்களை உலக வரைபடத்தில் 4G-க்கு கொண்டு வருகிறோம்," Manu Sood, Hub தலைமை நிர்வாக அதிகாரி - Upper North, Bharti Airtel ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், "நாங்கள் அரசாங்கத்தின் 'டிஜிட்டல் இந்தியா' பார்வைக்கு உறுதியுடன் இருக்கிறோம், மேலும் லடாக்கில் தொடர்ந்து முதலீடு செய்வோம்," என்று அவர் கூறினார்.

4G சேவைகள் உள்ளூர்வாசிகளுக்கு HD தரமான வீடியோ ஸ்ட்ரீமிங், சூப்பர்ஃபாஸ்ட் பதிவிறக்கங்கள் மற்றும் பதிவேற்றங்கள் மற்றும் அதிவேக இணைய உலாவல் போன்ற டிஜிட்டல் சேவைகளை அனுபவிக்க உதவும்.

இந்த கிராமங்களின் குடிமக்களை மேம்படுத்துவதற்காக, பிராந்தியத்தில் கடுமையான வானிலை மற்றும் கடுமையான நிலப்பரப்பின் சவால்களை சமாளிக்க, ஏர்டெல்லின் நெட்வொர்க் குழுக்களின் முயற்சிகளை இந்த வெளியீடு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று டெல்கோ தெரிவித்துள்ளது.

Advertisement

ஏர்டெல்லின் தற்போதைய நாடு தழுவிய நெட்வொர்க் உருமாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக - Project Leap, டிசம்பர் 2017-ல் லடாக்கின் லே (Leh), கார்கில் (Kargil) மற்றும் டிராஸில் (Dras) 4G சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் ஆபரேட்டர் 'ஏர்டெல்' ஆகும்.

இந்த விரிவாக்கம் ஏர்டெல் நிறுவனத்தில் 4G சேவைகளை அறிமுகப்படுத்தியதன் இரண்டாம் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel, Ladakh, 4G
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.